ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக்.. உண்மையில் என்ன காரணம்? அமைச்சர் சிவசங்கர் பரபர விளக்கம்! பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் இன்று மாலை முதல் ஸ்டிரைக்கை அறிவித்துள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் சிவசங்கர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பொதுவாகப் பண்டிகை நாட்களில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இப்போது சரஸ்வதி பூஜை, விஜய தசமி காரணமாகத் தொடர் விடுமுறை பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

இதற்கிடையே சில பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்டிரைக்: அரசு இந்த முறை கட்டணம் நிர்ணயம் செய்யாத நிலையில், சங்கம் நிர்ணயம் செய்த கட்டணத்தை வசூலித்தாக கூறும் ஆம்னி பேருந்துகள் சங்கம், அப்படி இருக்கும் போது நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது என்றும் சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி இன்று மாலை 6 மணி முதல் ஸ்டிரைக் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த பிரச்சினை குறித்து டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், "ஸ்டிரைக்கில் ஈடுபடும் சங்கங்களுடன் நானே நேரடியாகப் பேசியுள்ளேன். அவர்கள் சில கோரிக்கைகளை விடுத்துள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலித்ததாக சில பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தோம்.
நடவடிக்கை தொடரும்: தவறு செய்த பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறு இல்லை என்றே அவர்களும் என்னிடம் சொன்னார்கள். சில பேருந்துகள் தவறு செய்யவில்லை என்கிறார்கள். அது குறித்து ஆய்வு செய்யப்படும். தவறு செய்யவில்லை என்றால் அந்த பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் ஆம்னி பேருந்து சங்கத்தினருடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினோம். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அவர்கள் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைச் சொன்னார்கள். அதன்படி சுமுகமான முடிவு எடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே கடந்த காலங்களில் பண்டிகை சமயங்களில் கூடுதல் கட்டணம் புகார் இல்லாமல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது.
என்ன காரணம்: கடந்த 8 மாதங்களில் ஒரு சில பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்களிடம் இருந்து எங்களுக்குப் புகார் வந்தது. தீபாவளிக்கு முன்னதாக இந்தப் பிரச்சினைகளைச் சரி செய்ய வேண்டும் என்பதால் நடவடிக்கை எடுத்தோம். அதேபோல வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை இயக்கக் கூடாது என அறிவித்திருந்தோம். அதையும் மீறி சிலர் இயக்கி இருந்தார்கள். இதன் காரணமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்போது மொத்தம் 102 பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளோம். அதில் ஒரு சில பேருந்துகள் மீது எந்தவொரு தவறும் இல்லை என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். எனவே, இது குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம். பிரச்சினை இல்லாத பேருந்துகள் மட்டும் விடுவிக்கப்படும். தவறு செய்த பேருந்துகள் மீதான நடவடிக்கை தொடரும்.

பொதுமக்கள்: கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை இயக்கக் கூடாது என்பதே அரசின் உத்தரவாகும். மாலையில் ஸ்டிரைக் தொடரும்பட்சத்தில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
விதிமீறல் காரணமாகவே ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளிக்கு முன்பு ஆம்னி பேருந்துகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அப்போதும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் அளிக்க எண் அறிவிக்கப்படும்.
பொதுமக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும், பொதுமக்கள் நலன் கருதியே அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் பேர் பத்திரமாகப் பயணித்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications