Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"3 வருஷம் டைம் கொடுங்க.. அதன் பிறகு சென்னையை பாருங்க.." அமைச்சர் தாமோ அன்பரசன் பன்ச்.. ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தரமணி காணகம் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் தாமோ அன்பரசன் அரசின் குடிசை மாற்றுவாரிய கட்டிடங்கள் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

Recommended Video

    3 வருஷம் டைம் கொடுங்க.. அதன் பிறகு சென்னையை பாருங்க.. அமைச்சர் தாமோ அன்பரசன் பன்ச்.. ஏன் தெரியுமா

    சென்னை தரமணி காணகம் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளின் உறுதித்தன்மையை அமைச்சர் தாமோ அன்பரசன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தாமோ அன்பரசன் அரசின் குடிசை மாற்றுவாரிய கட்டிடங்கள் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

    தாமோ அன்பரசன்

    தாமோ அன்பரசன்

    செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், "இந்த குடியிருப்பு வாழ்வதற்குத் தகுதி இல்லாத வீடு என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதியை முழுவதுமாக இடித்து புதிதாகக் கட்டி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு உள்ள குடியிருப்பு வாசிகள் 2 பிரிவினராக உள்ளனர். ஒரு பிரிவினர் வீடு வேண்டும் எனவும் மற்றொரு பிரிவினர் 450 வீடுகளுக்கு மேல் கட்ட கூடாது என்று கூறுகின்றனர்.

    வேகமாக பணிகள் முடிப்போம்

    வேகமாக பணிகள் முடிப்போம்

    இதனை மக்கள் வாழ்வதற்குத் தகுதி இல்லாத பகுதி என அறிவிக்க இருக்கிறோம். அதனால் இப்பகுதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த பகுதியை காலி செய்து கொடுத்தால் நாங்கள் புதிதாகக் கட்டி தரத் தயாராக இருக்கிறோம். மேலும், இப்பகுதி மக்கள் புதிய வீடுகள் கட்டுவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போது தான் வேகமாக புதிய குடியிருப்பைக் கட்டி தர முடியும்.

    கட்டுமானம்

    கட்டுமானம்

    தமிழ்நாட்டில் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள கட்டடங்கள் குடியிருப்புகள் அனைத்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன இதில் சிதிலம் அடைந்துள்ள கட்டடங்கள், வாழத் தகுதியற்ற கட்டிடங்கள் என வகைப்படுத்தப்பட்டு, அவை புதுப்பிக்க மற்றும் புதிதாகக் கட்டப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா காலமாக இருந்தாலும் எந்தவித தடையுமில்லாமல் கட்டுமான பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுத் திட்டமிட்டபடி வீடுகள் ஒப்படைக்கப்படும்.

    3 ஆண்டுகள்

    3 ஆண்டுகள்

    மேலும், சென்னை முழுவதும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாழடைந்த வீடுகள் ஆகக் கணக்கிடப் பட்டுள்ளது அவை ஒன்றன்பின் ஒன்றாகப் புதிதாகக் கட்டப்படும். மேலும் மூன்று ஆண்டுகளுக்குள் சென்னையில் பாழடைந்த வீடுகள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    அதிகரிக்கும் புகார்கள்

    அதிகரிக்கும் புகார்கள்

    சென்னையில் சமீப காலங்களாக அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் உரியத் தரத்தில் இல்லை என்கிற புகார்கள் கிளம்பியுள்ளன. சமீபத்தில் கூட கேபி பார்க் குடியிருப்பின் சுவர் பூச்சு தொட்டாலே உதிரும் நிலையில் இருந்தது. அதேபோல திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய கட்டிடம் அப்படியே இடிந்து விழுந்தது. இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நடப்பதால் தரமற்ற நிலையில் இருக்கும் குடிசை மாற்றுவாரிய கட்டடங்களை உடனடியாக இடித்துவிட்டு புதிய கட்டடங்களைக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது,

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+