நம் குடியிருப்பு நம் பொறுப்பு! புதிய செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
சென்னை: நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான புதிய செயலியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னையில் இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இனி இந்த செயலி மூலமே நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான மாத தவணைத் தொகை, பராமரிப்பு தொகை, நிலுவைத் தொகை,போன்றவற்றை செலுத்தலாம் என்பது கூடுதல் தகவல்.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது;

அமைச்சர் பேச்சு
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தங்களது தவணைகளை எளிய முறையில் செலுத்திட வேண்டும் என்பதற்காக நம்ம குடியிருப்பு என்ற புதிய செயலி இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை குடியிருப்புதாரர்கள் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மாத தவணைத் தொகை, நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான பராமரிப்பு தொகை, நிலுவைத் தொகை, போன்றவற்றை செலுத்தலாம்.

QR code மூலம்
www.tnuhdb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை QR code மூலமாகவும் செலுத்தலாம். நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 417 குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டு 206 குடியிருப்போர் நலச்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்போர் நலச்சங்கம் பத்திரப்பதிவு துறையில் பதிவிற்கான கட்டணத்தை அரசால் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு திருப்பி வழங்கப்படுகிறது.

குடியிருப்போர் நலச்சங்கம்
குடியிருப்போர் நலச்சங்கம் பதிவு செயப்பட்ட பிறகு அதனுடைய வங்கி கணக்கில் 3 மாதத்திற்கான இணை மானியம் அரசால் வழங்கப்படுகிறது. குடியிருப்புகள் சம்மந்தமான குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய 84 சமுதாய பங்களிப்பு உதவியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புதாரர்களின் குடியிருப்பு சம்மந்தமாக மின்தூக்கி, குடிநீர் பிரச்சனை , கழிவுநீர் பிரச்சனை போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய இப்பணியாளர்கள் மூலம் பதிவேடு பராமரிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது.

பழுது பார்ப்பு
மேலும் குடியிருப்புகளுக்கு மற்றும் மனைகளுக்கு கிரையப் பத்திரங்கள் வழங்குவது , அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் , புதிய மறுகட்டுமான திட்டப்பகுதிகளின் தற்போதைய நிலை , பழுது பார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் அயல்நாட்டு நிதி திட்டங்கள் , பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் திட்டம், மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது .இதுவரை 3405 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூபாய் 8 கோடியே 17 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications