Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாம்சங் ஆலை வேறு மாநிலத்துக்கு போகுதா? பரவும் தகவல்! அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டுள்ளார். தொழிற்சங்க நிர்வாகிகள் யாரையும் வீடு தேடிச்சென்று கைது செய்யவில்லை, சாலை விபத்தின் போது அங்கு வந்த காவலர்களை தாக்கியவர்களே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை. சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்ந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது.

samsung protest tamil nadu

தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா, சி.வெ.கணேசன் ஆகியோர் அடங்கிய குழு மற்றும் சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகள், போராட்டக் குழுவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஊழியர்களில் ஒரு தரப்புக்கும், சாம்சங் நிர்வாகத்தினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. அதேசமயம், சிஐடியூ தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற அந்த நிறுவனம் முன்வந்துள்ளது. சிஐடியூ தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

சாலை விபத்தின் போது அங்கு வந்த காவலர்களை தாக்கியவர்களே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை. சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால், எப்போதும் போல காவல்துறை கைது செய்து, பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதே போலத்தான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்து விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை.

தொழிற்சங்கத்தை பதிவு செய்ய சி.ஐ.டி.யூ சங்கம் கடிதம் அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாம்சங் நிறுவனம் கடிதம் அனுப்பியது. நீதிமன்றத்தில் உள்ள இந்த விவகாரத்தில், நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை தமிழக அரசு செயல்படுத்தும். சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு அங்கீகரித்துள்ளது.

இந்த விவகாரத்தில் சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, போராட்டத்தை வாபஸ் பெறவேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

சாம்சங் ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக சாம்சங் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு. சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம் மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானது என்றும் தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+