Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டியில் மினி டைடல் பார்க்! சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஜில் ஜில் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

ஊட்டியில் மினி டைடல் பார்க்! சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஜில் ஜில் அறிவிப்பு!

சென்னை: தஞ்சாவூர் மற்றும் உதகமண்டலத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு 3 சதவீதம் மற்றும் 6 சதவீதம் வட்டிமானியம் மேலும் ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அவர் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளின் விவரம் வருமாறு:

முக்கிய அறிவிப்புகள்

முக்கிய அறிவிப்புகள்

தொழில் துறையினை " தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை" என பெயர் மாற்றம் செய்யப்படும்.

முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும்.

விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும்.

ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் பெரிய அளவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, "ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை வெளியிடப்படும்.

சுற்றுச்சூழலின் தரத்தை எத்தனால் கொள்கை வெளியிடப்படும்.

ஊட்டியில் டைடல் பார்க்

ஊட்டியில் டைடல் பார்க்

தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ன்கீழ் ஊக்கச்சலுகைகளுடன், கூடுதலாக தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டம் வெளியிடப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓதர் மற்றும் குருபரப்பள்ளி தொழிற்பூங்காக்களில் சுமார் 26 கோடி ரூபாய். திட்ட மதிப்பீட்டில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.

தஞ்சாவூர் மற்றும் உதகமண்டலத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்துறை தொழிற்பூங்கா ஒன்று தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

பல கோடி ரூபாய்

பல கோடி ரூபாய்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிகை வீட்டுவசதி திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்

தமிழ்நாட்டில் பிரத்யேக போக்குவரத்திற்கான வழித்தடத்தை சரக்குப் (Dedicated Freight Corridor) அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு. சுமார் 3 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம், சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.

கோவைக்கு முக்கியத்துவம்

கோவைக்கு முக்கியத்துவம்

கோயம்புத்தூரில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்காக, தயாரிப்பிற்கு பிந்தைய செயல்பாடுகளுக்கான அலகு (Post Processing Unit) ஒன்று 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

பிரத்யேக பாதுகாப்பு பூங்காக்கள் (Thematic Defence Parks) சுமார் 50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்

விமானத்தை இயக்க பயிற்சி தரும் (Flying Training நிறுவனங்களை Organizntions) அமைக்க துணை புரிதல்

கோயம்புத்தூரில் போக்குவரத்து பல்முனைய பூங்கா 300 கோடி ரூபாய் அமைக்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு 3 சதவீதம் மற்றும் 6 சதவீதம் வட்டிமானியம் மேலும் ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும்.

சிமெண்ட் ஆலைகள்

சிமெண்ட் ஆலைகள்

அரியலூர் சிமெண்ட் ஆலையில் 2.50 கோடி ரூபாய் செலவில் 10.000 மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய ஒரு புதிய மூடும் வசதி கொண்ட நிலக்கரி கிடங்கு Closed Conl shed) அமைக்கப்படும்.

ஆலங்குளம் சிமெண்ட் ஆலை வளாகத்தில், மணிக்கு 80 மெட்ரிக் டன் அரவை திறன் கொண்ட ஒரு புதிய சிமெண்ட் அரவை இயந்திரம் ஒன்று அதற்குரிய கட்டமைப்பு வசதிகளுடன் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

Important announcements about Tn Industries dept:தஞ்சாவூர் மற்றும் உதகமண்டலத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+