வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்: அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Recommended Video
சட்டப்பேரவை கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. ஜனநாய மரபுக்கு எதிரானது. எனவே இதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மிக பெரிய துரோகம்
இந்த தீர்மானத்தை கொண்டு வந்தபோது அதிமுக அதனை வரவேற்று இருந்தால் ஏற்கனவே செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக இருந்திருக்கும். ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்திருப்பது தமிழக விவசாய மக்களுக்கு மீண்டும் செய்திருக்கக்கூடிய மிகப்பெரிய துரோகம் என தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய மு க ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து கட்சியினர் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார். விவசாயிகளுக்காக விவசாயிகளின் நலனுக்காகவும் கொண்டு வந்த இந்த சட்டத் திருத்தத்தில் சட்டமன்றத்திலேயே அதிமுக கருத்து தெரிவித்து இருக்கலாம்.

வெளிநடப்பு
ஆனால் அதனை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது தெரிந்தே வேண்டுமென்றே அந்த துரோகத்தை செய்து வருகின்றனர். அதிமுக விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள கட்சியாக இருந்திருந்தால் இந்த தீர்மானத்தை ஆதரித்து இருக்க வேண்டும்.

அதிமுக ஆதரிக்கவில்லை
இதை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்ததில் இருந்தே இதனை அதிமுக ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது அதிமுக உள்நோக்கத்தோடு வெளிநடப்பு செய்தது. இதன்மூலம் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications