மே 11 முதல் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கிடைக்கும்- தங்கம் தென்னரசு
சென்னை: மே 11 ஆம் முதல் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்டெர்லைட் மூலம் தமிழகத்திற்கு 31 மெ. டன் ஆக்சிஜன் கிடைக்கும். ஸ்டெர்லைட் மூலம் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் வரும் 11 ஆம் தேதி முதல் கிடைக்கும்.
தொழில் துறையினர் மற்றும் வணிகர்களுடன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்.
தனியார் நிறுவனங்களிடம் ஆக்சிஜன உற்பத்திக்காகவும் அதை பெறுவதற்காகவும் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. வரும் காலகட்டத்தில் ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications