Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவர் கட் பிரச்சனை.. வீடியோ காலில் வந்த தங்கம் தென்னரசு.. இபி அதிகாரிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை பெய்ய உள்ள நிலையில், தடங்கள் ஏற்படாமல் சீரான மின் விநியோகம் வழங்குமாறு அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக மழை காலங்களில் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.சில நேரங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்துக்களும் ஏற்படுவது உண்டு. இதன் காரணமாகவே மழை காலங்களில், மோசமாக மழை பெய்யும் நேரங்களில் மின் விநியோகத்தை துண்டித்துவிடுவார்கள். மழையால் எங்கும் மின்சார வயர்கள் அறுந்துவிடவில்லை என்பதை உறுதி செய்த பின், மின்சாரத்தை விநியோகத்தை படிப்படியாக சீராக்குவார்கள்.

Minister Thangam thennarasu sent important instructions to TN electricity board officials on video call

அதேநேரம் மின்சார வயர்களில் திடீரென ஏற்படும் பழுதுகளால் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில் தான் தடங்கள் ஏற்படாமல் சீரான மின் விநியோகம் வழங்குமாறு அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன் மற்றும் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மின் பகிர்மான வட்டங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டறிந்தார்.

மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதற்கான காரணத்தைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார்.

மேலும், மின்னகம்' மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார். அனைவருக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மின்வாரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் கூறும் போது, மின்சார சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் உரிய பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும். மின்வாரிய பணியாளர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அளிக்க வேண்டும். அதன் மூலம் பாதுகாப்பான முறையில் மின் கட்டமைப்பைச் சீர்செய்யும் பணியினை செய்திட வேண்டும்.

அனைத்து மின்வாரிய வாகனங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அருகாமையில் உள்ள மின் பகிர்மான வட்டங்களிலிருந்து ஆட்களை பணியில் ஈடுபடுத்தலாம். மழைக் காலங்களின்போது மாவட்ட நிர்வாகத்தினருடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். கனமழையின் போது, தமிழ்நாட்டின் அனைத்து மின்மேற்பார்வை பொறியாளர்களும் தமது அலுவலகங்களில் இதற்கென தனியாகக் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவின் மூலம் கன மழையின்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சேதாரங்கள் குறித்தும் ஆய்வுசெய்து உடனடியாக தகவல்கள் தெரிவிக்க வேண்டும்.

மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களைப் பொருத்து , பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேற்பார்வை பொறியாளர்கள் தயாராக இருக்க வேண்டும்.

சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்தமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனுக்குடன் கள ஆய்வு செய்து மின் விநியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும். பருவ மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில், மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்" இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+