வடை பாயாசத்துடன் இன்னைக்கு ஒரு பிடி! பார்த்தசாரதி கோயிலில் உதயநிதி ஸ்டாலின்! தடபுடல் பொதுவிருந்து!

மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட உதயநிதி ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா நினைவுநாளையொட்டி சென்னை பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

மக்களோடு மக்களாக பொதுவிருந்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட அவர் தனது அருகில் அமர்ந்து சாப்பிட்டவர்களிடம் உணவின் தரம் பற்றி கேட்டறிந்தார்.

பொதுவிருந்தில் சாதம், சாம்பார், ரசம், அப்பளம், வடை, பாயாசம் கேரட் பொறியல், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட மெனு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணா நினைவுநாள்

அண்ணா நினைவுநாள்

அண்ணா நினைவுநாளான பிப்ரவரி 3ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரசித்து பெற்ற கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சென்னை பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.

அனைவரும் சமம்

அனைவரும் சமம்

அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெறும் விருந்து என்பதால், மக்களோடு மக்களாக ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அமைச்சர்கள் சேகர்பாபுவும், உதயநிதி ஸ்டாலினும் அமர்ந்து சாப்பிட்டனர். இந்த சமத்துவ விருந்தில் சாதம், சாம்பார், ரசம், அப்பளம், வடை, பாயாசம் கேரட் பொறியல், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட மெனு இடம்பெற்றிருந்தது. அமைச்சராகிய பிறகு உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் முதல் சமத்துவ விருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமத்துவ விருந்து

சமத்துவ விருந்து

சென்னையை போலவே தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கோயில்களில் அண்ணா நினைவு நாளையொட்டி சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், உள்ளிட்ட மக்கள் பிரதிதிகள் கலந்துகொண்டனர். இதனிடையே பல ஆண்டுகளாக சமபந்தி போஜன விருந்து என்று அழைக்கப்பட்டு வந்த வார்த்தையை விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் கோரிக்கையை ஏற்று சமத்துவ விருந்து, பொது விருந்து என மாற்றியது தமிழ்நாடு அரசு.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

பார்த்தசாரதி கோயில் வளாகத்தில் மக்களோடு மக்களாக பொதுவிருந்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அருகில் அமர்ந்து சாப்பிட்டவர்களிடம் உணவின் தரம் பற்றியும் கேட்டறிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+