ஜெயலலிதாவை A1ஆகவும் சசிகலாவை A2 ஆகவும் கம்பி எண்ண வைத்தது சட்டத்துறைதான்! அமைச்சர் உதயநிதி பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை A1 ஆகவும் சசிகலாவை A2 வாகவும் கம்பி எண்ண வைத்தது இந்த சட்டத் துறைதான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் ஒன்றியமும் மாநிலமும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

Minister Udhayanidhi stalin praises Law department

இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் திமுகவில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்றால் அது சட்டத் துறை தான். திமுகவின் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இளைஞர் அணி, மாணவர் அணி என்றெல்லாம் நானே கூறியிருக்கிறேன். ஆனால், திமுகவின் சட்டத்துறை கடினமான காலங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவை A1 ஆகவும் அவரது நெருங்கிய தோழி சசிகலாவை A2 ஆகவும் கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத் துறைதான்.

2 மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றார். தமிழ்நாடு என இருக்க வேண்டாம், தமிழகம் என மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். இதற்கு தமிழ்நாட்டில் முதல்வராக எடப்பாடி பழனிசாமியோ அல்லது ஓ பன்னீர் செல்வமோ இருந்தால் நம் மாநிலத்தின் பெயரை மாற்றியிருந்திருப்பார்கள்.

திமுக ஆட்சி இருப்பதால் தமிழக ஆளுநரின் கோரிக்கைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுத்தார். அண்ணாவுக்கு அருகில் உறங்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வரும் நம் தலைவருமான கருணாநிதி கடைசி ஆசையாக இருந்தது. இதற்காக கடுமையாக பாடுபட்டு நிறைவேற்றி காட்டியது இந்த சட்டத் துறைதான்.

ஜெயலலிதா இருந்த போது இருந்த அதிமுகவின் நிலை வேறு. தற்போது இருக்கும் நிலை வேறு. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவும் விளையாட்டுத் துறை சார்பாக 5 முக்கியமான கோரிக்கைகளை வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடியை நான் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். ஆனால் எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் என்ன செய்கிறார்கள் தங்களது கட்சி பிரச்சினைகளை தீர்க்கவே பிரதமரை சந்திக்கின்றனர்.

Minister Udhayanidhi stalin praises Law department

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் என்ன நிலைமை இருந்தது. அதிகாரக் குவியல், கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் தெரியவில்லை என்றார். இறுதியில் அவர்களது எதிரிகள் எல்லாம் அவர்கள் பின்னாலேயே இருந்துள்ளார்கள். இதுதான் அதிகாரப்பரவலுக்கும் அதிகார குவியலுக்குமான வித்தியாசம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+