நாங்க 3 பேரு.. அப்துல்லாவுடன் 25 வருட நட்பு.. அவர் இல்லாம நான் இல்ல! நெகிழ்ச்சிக் கதை சொன்ன உதயநிதி!
சென்னை: திமுக அயலக அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி எம்.எம்.அப்துல்லா உடனான தனது நீண்ட கால நட்பு பற்றி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
திமுக அயலக அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. திமுக அயலக அணி தலைவர் கலாநிதி வீராசாமி, அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா மற்றும் அயலக அணி நிர்வாகிகள் ஏராளமானோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட ராயப்பேட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அயல்நாடுகளில் இன்னலுக்கு ஆளாகின்ற தமிழர்களை மீட்டு தாயகம் அழைத்து வர துணை நிற்கும் அயலக அணியின் மனித நேயப்பணிகளை எடுத்துரைத்து உரையாற்றினார்.
குறிப்பாக, மதம், சாதி, மொழி போன்ற முகமூடிகளுடன் வெளிநாடுகளில் திராவிட இயக்கத்துக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளை, பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் கருத்தாயுதம் ஏந்தி முறியடித்து வருகின்ற அயலக அணி தோழர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மேலும், திமுக அயலக அணி தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் 37 நாடுகளில் அமைப்பை உருவாக்கி, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நம்பிக்கையாகத் திகழ்கிறது என்றும், அயலக அணியின் பணிகள் சிறக்கட்டும் என்றும் வாழ்த்திப் பேசினார் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அயலக அணி செயலாளர் எம்.எம். அப்துல்லா எம்.பி உடனான தனது நட்பைப் பற்றியும் நெகிழ்ச்சியோடு கூறினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இங்கே பேசிய அயலக அணியின் செயலாளர் எம்.எம். அப்துல்லா எனக்கு நன்றி சொன்னார். அவர் இல்லாமல் நான் இல்லை என்று என்னைப் பற்றிக் கூறினார். அந்த வார்த்தையை நான் அவருக்கே கொடுத்து விடுகிறேன். அவர் இல்லாமல் நான் இல்லை, நீங்கள் இல்லாமல் நான் இல்லை.
பல பேருக்கு தெரியாது. நானும் அப்துல்லாவும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக நண்பர்கள். நான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அப்துல்லா ஆகிய 3 பேரும் 1996ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாக பிரச்சாரம் செய்தோம். அப்துல்லாவும், மகேஷும் என்னுடன் வருவார்கள். அப்போது தொடங்கிய நட்பு.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக தலைவர் ஸ்டாலின் என்னை அழைத்து தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்ய போகச் சொன்னார். அப்போது என்னுடன் நான் அழைத்துக் கொண்டது அப்துல்லாவைத்தான். தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்யச் சென்றபோது என்னுடன் நின்றது அப்துல்லா தான். அதுமட்டுமல்ல, அவர் தான் எனக்கு பேசுவதற்கு குறிப்புகளை எடுத்துத் தருவார்.
இந்த இடத்தில் இதைப் பேசுங்கள் என பல குறிப்புகளைக் கொடுப்பார். அவருக்கு இதுவரை எந்த மேடையிலும் நான் நன்றி சொன்னது இல்லை. அதற்கு இதைவிட சிறப்பான மேடை கிடைக்குமா என்று தெரியவில்லை. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்த நேரத்திலே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பேசினார் உதயநிதி. நீண்டகால நட்பைக் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலினின் பேசியதைக் கேட்டு, நெகிழ்ந்து போய் அமர்ந்திருந்தார் அப்துல்லா.
-
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்!












Click it and Unblock the Notifications