தவெக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிக நிலைப்பாடு என்ன.. அமைச்சர் வன்னி அரசு கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கூட்டணியில் பாமக இணைய உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறிய அமைச்சர் வன்னி அரசு, பாஜக, பாமக இடம் பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என உறுதிபட கூறினார். குறிப்பாக சாதியவாத பாமக, மதவாத பாஜக ஆகியோருடன் கூட்டணி கிடையாது என அழுத்தம் திருத்தமாக விசிக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே விஜய்யின் தவெக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாகவும், சவுமியா அன்புமணிக்கு முதல்வர் விஜய் அமைச்சர் பதவி கொடுக்க ஒகே சொல்லிவிட்டதாகவும் தகவல் பரவி வந்தது. இது குறித்து தான் அமைச்சர் வன்னி அரசுவிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் வன்னி அரசு கூறியதாவது:-

Vanni Arasu responds - What would be the VCK s stance if the PMK joins the TVK alliance

"ஏற்கனவே எங்களது தலைவர் சொல்லிவிட்டார். 10 ஆண்டுகளுக்கு மேலாக வெளிப்படையாக அறிவித்த அறிவிப்பு முக்கியமான அறிவிப்பு, சாதியவாத பாமகவோடும், மதவாத பாஜகவோடும் ஒரு போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைக்க மாட்டோம் என்ற எங்களுடைய நிலைப்பாட்டை கூறியிருக்கிறோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் நாங்கள் தொடருவோம். அந்த நிலைப்பாட்டில் தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

அப்போது செய்தியாளர்கள் தவெக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விசிக இடம்பெறுமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வன்னி அரசு, "எங்கள் நிலைப்பாடை சொல்லிவிட்டோம். இது தான் எங்கள் நிலைப்பாடு.. இந்த கருத்துக்கள் தொடர்பாக சவுமியா அன்புமணி தெளிவுப்படுத்தியிருக்காங்க.. அவங்களே இது எல்லாம் வதந்தி என சொல்லிவிட்டாங்க.. ஆகவே வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+