கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுவிலக்கு துறையில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளன. தவெக பொறுப்பேற்றதும் 717 டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. அதற்கு வரவேற்பு இருந்தும், அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த துறை அமைச்சர், பணியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே மாதம் 2022 ஆம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டு படிப்படியாகத் தற்பொழுது சென்னை, திருநெல்வேலி, விருதுநகர் நீங்கலாக தமிழ்நாட்டின் பிற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Tasmac Vignesh TVK Vijay

கடையடைப்பு போராட்டம்

இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகப் பணியாளர்களிடமிருந்துப் புகார்கள் கடந்த காலங்களில் வந்த வண்ணம் இருந்தன. பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை வெளி முகமை வழியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்னிறுத்தி ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.

மேலாண் இயக்குனர், அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் நேரில் அழைத்துப் பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் இயன்றவரை சரி செய்யப்படும் என்ற வாக்குறுதியை அளித்தும் கடைகள் திறக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த அறிவுறுத்தலில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எவ்வளவு பொறுப்புள்ளதோ அதே அளவு பணியாளர்களுக்கும் பொறுப்பு உண்டு என்றும், இதனை செயல்படுத்த பணியாளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

விக்னேஷ் வேண்டுகோள்

இந்நிலையில் பணியாளர்களின் கோரிக்கைக்கு இணங்க வெளி முகமையின் வழியாக காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை உடனடியாக உருவாக்கி உயர் நீதிமன்றத்தில் உறுதிப் பத்திரம் (affidavit) அளித்து வரும் ஜூன் மாத இறுதிக்குள் பணியாளர்களின் கோரிக்கையை முழுவதும் நிறைவேற்றும் வண்ணம், அவர்கள் பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை கையாளும் தற்போதைய நடைமுறையை முழுமையாக தவிர்க்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

எனவே, பணியாளர்கள் அனைவரும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து, பணியாளர் நலன் காக்க நிர்வாகம் முன்மொழியும் இத்திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு வழக்கம் போல பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+