ஸ்டாலினுக்கு என்ன ஆச்சுனே தெரியல.. இப்படியெல்லாம் அவர் பேசக் கூடாது! அமைச்சர் விஜய் பாலாஜி வேதனை!
சென்னை:முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மதிப்பு மிக்கவர், சமீப காலமாக ஏன் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துகிறார் பண்போடு சொல்கிறோம் இந்த மாதிரி அவர் பேச வேண்டாம் என அமைச்சர் அமைச்சர் விஜய பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் 10 காய்கறிகள் அடங்கிய தீபாவளி சிறப்பு "வெற்றி காய்கறி" தொகுப்பு விநியோகத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜய பாலாஜி கூறுகையில்," பண்டிகை நெருங்கும் நிலையில் கோ ஆப்டெக்ஸ் மற்றும் காதி கிராப்ட் போன்ற அரசு கடைகளுக்கு பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளம்பரம் செய்யவில்லை என்கிறார்கள்.

விஜய் பாலாஜி
கடந்த காலங்களில் உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த மாதிரி விளம்பரத்திற்காக அரசாங்கத்தின் பணத்தை எடுத்து விளம்பரத்திற்காக பயன்படுத்தி வந்தார்கள். இந்த முறை கொள்கை முடிவாக அரசு பணத்தில் இருந்து விளம்பரங்களை பெரிசாக செய்வது கிடையாது. முதல்வர் வரும் போது கூட பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லாமல் அரசின் பணத்தை சேமித்து வருகிறோம். அதேபோல அந்தந்த கடைகளில் உள்ளவர்கள் அவர்களாகவே விளம்பரம் செய்து கொள்வார்கள். நூல் விலை உயர்வு தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசிடம் இரண்டு முறை மனு கொடுத்துள்ளோம்.
முதல்வர் விஜய்
ஜிஎஸ்டி குறைக்க கேட்டுள்ளோம். மீண்டும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் இல்லாதது போல் இந்த முறை இரண்டு மடங்காக உயர்த்தி ஒரு கோடியே 87 லட்சம் சேலை, ஒரு கோடியே 87 லட்சம் வேட்டி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது என்பது பொய்யான தகவல்.
கோ ஆப்டெக்ஸ்
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கோ ஆப்டெக்ஸ் சார்பில் 10 புதிய கடைகளை திறந்துள்ளோம். மேலும் தேவைபடும் பட்சத்தில் கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறி துறையில் பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிக ஆட்கள் தேவைபடும் போது புதியதாக ஆட்களை எடுக்க துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கோ ஆப்டெக்ஸ் கடைகள் மூடப்படுவதாக வரும் புகார்கள் பொய்யானவை.
அரசு அதிகாரிகள்
வியாபாரம் இல்லாமல் நஷ்டம் அடைந்த கடைகளை தான் மூடச் சொல்லி அதற்கு பதில் மக்கள் நடமாட்டம் உள்ள வியாபார சாத்தித்தக்கூறு உள்ள பகுதிகளில் புதிய கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளோம்.
மரபு நாள் கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் கூறியதை வரவேற்கிறோம். இதனால் கைத்தறி நெசவாளர்கள் பயனடைவார்கள்.அவர்களின் வாழ்வாதாரம் இதனால் உயரும். நாங்களும் அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கு கோ ஆப்டெக்ஸ் துணிகள் பயன்படுத்த சுற்றறிக்கை அனுப்பி வேண்டுகோள் வைத்துள்ளோம்.
முக ஸ்டாலின்
இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பது அறிவுலகத்திற்கு நல்லது என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அவர் பெரும் மதிப்பிற்குரியவர், நாம் அரசியல் பார்த்த மதிப்புமிக்க தலைவர் இப்ப சமீப காலமாக ஏன் அவர் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை உண்மையாலுமே அவரை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டாம் கட்ட தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை எல்லாம் அவர் பயன்படுத்துகிறார். அவரிடம் பண்போடு சொல்கிறோம் எல்லோரும் மதிக்கும் தலைவராக இருக்கிறார் இந்த மாதிரி அவர் பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்" என அமைச்சர் விஜய் பாலாஜி கூறினார்.




Click it and Unblock the Notifications
