வந்தே பாரத்தை விடுங்க.. மணிக்கு 250 கிமீ வேகம்..! ரெடியாகும் ஹை ஸ்பீடு ட்ரெயின்.. வேற லெவல் பிளான்
சென்னை: மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடன் கொண்ட 2 ரயில்களை வடிவமைக்குமாறு சென்னையில் உள்ள ஐசிஎப்-பிற்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த இரண்டு ரயில்களும் 2025 இறுதிக்குள் வடிவமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை அதிவேகம், சொகுசான பயணம் என பயணிகளை கவரும் விதமாக உள்ளது.

வந்தே பாரத் ரயில்: தமிழகத்திலும் சென்னையில் இருந்து கோவை, சென்னை- நெல்லை, கோவை- பெங்களூர், சென்னை - மைசூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுக்க 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
250 கி.மீ வேகம்: தொலை தூர பயணிகளுக்கு ஏற்ற விதமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களையும் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்கும் பணி சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் வடிவமைப்பு குறித்த படங்கள் வெளியாகின.
இதனிடையே கடந்த 4 ஆம் தேதி ரயில்வே அமைச்சகத்தில் இருந்து சென்னை ஐசிஎப்பிற்கு கடிதம் ஒன்று எழுதியிருக்கிறது. அதில், மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் 2 ரயில்களை தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாம். இந்த ரயில் முழுக்க முழுக்க ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட இருக்கிறது.
8 பெட்டிகள்: அதிகபட்சமாக 250 கி.மீட்ட வேகத்தில் செல்லக் கூடிய வகையில் இந்த ரயில் வடிவமைப்பு இருக்கும். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "வந்தே பாரத் பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த புதிய ரயில் இருக்கும். வரும் காலத்தில் வந்தே பாரத் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பார்ட் ஆக இந்த ரயில் இருக்கும்.
எட்டு பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில்கள் இருக்கும். கடந்த ஒரு ஆண்டு காலமாகவே ராஜஸ்தானில் ஸ்டேண்டர்டு கேஜ் டிராக்குகள் டெவலப் செய்யப்பட்டுள்ளன. அதிவேக ரயில்கள் இயக்கும் திறனை சோதிக்கவும் வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்யவதற்காவும் இது செய்யப்படுகிறது" என்றனர்.
சாத்தியமா?: எனினும், இந்த திட்டம் சவால் மிக்கதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் வந்தே பாரத் ரயில்களின் டாப் ஸ்பீடு 180 கிலோ மீட்டராக உள்ளது. ஸ்டேண்டர்டு கேஜில் 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்களை மார்ச் 2025 - க்குள் தயாரிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது தான் என்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications