ஐயோ அம்மா.. விஜய் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நீலாங்கரையில் விஜய் பிறந்தநாளையொட்டி நடந்த விழாவில் சிறுவனின் கையில் தீக்காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சாகச நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இது போன்ற விபத்து இன்று காலை நிகழ்ந்தது. இதனால் சிறுவன் வலியில் துடித்த சம்பவம் அங்கிருந்தோரை கலங்கச் செய்தது. தீக்காயம் அடைந்த சிறுவன் நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இன்று பிறந்தநாள்! ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியிருந்தார்.

actor vijay chennai fire

இந்த நிலையில் இன்று அவருடைய பிறந்தநாளுக்கு நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என வாழ்த்துகளை சமூகவலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் விஜய் பிறந்தநாளின் போது சிறுவனின் கையில் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்து, அந்த கைகளால் ஓடு உடைக்கும் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஒரு மேடை போட்டு அதில் ஓடுகள் வைக்கப்பட்டன.

அந்த சிறுவனின் கையில் பெட்ரோல் லேசாக ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டது. அப்போது திடீரென அந்த சிறுவனின் கையில் பயங்கரமாக தீப்பிடித்தது. அப்போது அருகே இருந்தவர், பதறி போய் அணைக்க முயன்ற போது தனது கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை மறந்த நிலையில் அதனால் மேலும் தீப்பிடித்தது.

சிறுவனுக்கும் அந்த நபருக்கும் தீப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறுவன் வலியால் அலறி வரும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் பிறந்த நாள் கொண்டாட்டமே வேண்டாம் என கூறியிருந்த நிலையில் அதையும் மீறி கொண்டாட்டத்தை நடத்தி, சிறுவனை வைத்து ஆபத்தான சாகசத்தை மேற்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் கட்சி நிர்வாகிகளும் ரசிகர்களும் செய்யும் காரியம் அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதாக நலம் விரும்பிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு விஜய் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்ட போது, உணவு பரிமாறிய அனைவருமே விஜய் மக்கள் இயக்கம் (கட்சி தொடங்குவதற்கு முன்பு) என்ற பேட்ஜ் அணிந்துள்ளனர். ஆனாலும் சாப்பாடு பரிமாறிய நபருடன் இன்னொரு இளைஞர் விஜய்யின் போட்டோவை ஏந்தியபடி இருந்தது முகம் சுளிக்க வைத்தது.

அது போல் நேற்று முன் தினம் கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற நடிகர் விஜய்யின் காலில் ஒரு பெண் விழுந்தார். அவரை தடுத்த விஜய், தோளில் அணைத்து ஆறுதல் கூறினார்.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் தவெக கட்சி நிர்வாகி அந்த பெண்ணை தள்ளிவிட்டு காலில் விழச் செய்ததாக தகவல் பரவின. இதையடுத்து அந்த பெண் தன்னை யாரும் விஜய் காலில் விழுமாறு வற்புறுத்தவில்லை, சிகிச்சை பெறுபவர் யார் என கேட்டதற்கு தனது கணவர் என்றதாகவும் அதனால் விஜய்யிடம் போய் பேசுங்கள் என்று தான் தன்னிடம் அந்த நபர் சொன்னார் என அந்த பெண் மறுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+