ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்காசிய பகுதியில் நீடித்து வரும் போர் பதற்றம் இன்னும் தணியாத நிலையில், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வரும் நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. மேலும், டொனால்ட் டிரம்ப் ஒரு வாரத்துக்கு போர் நிறுத்தம் என அறிவித்த நிலையில், இரவோடு இரவாக தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அணுசக்தி கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இந்த மோதல் தீவிரமடைந்தது. அன்றைய தினம் தொடங்கிய தாக்குதல்கள் ஈரானை கடுமையாக பாதித்ததாக கூறப்படுகிறது.

Iran LPG donald Trump

இந்த தாக்குதல்களின் போது ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பல முக்கிய ராணுவத் தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அலி கமேனியின் மகன் ஈரானின் அடுத்த உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா

இதனையடுத்து அவர் போரை வழிநடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ஈரான் அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான மோதல் கடந்த சில வாரங்களாக நீடித்து வரும் நிலையில், நேற்று (மார்ச் 23) தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

டிரம்ப் போர்நிறுத்தம்

அடுத்த ஐந்து நாட்களுக்கு ஈரான் மீது எந்தவொரு ராணுவத் தாக்குதலும் நடத்த வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நாட்டின் படைகளுக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த அறிவிப்புக்குப் பிறகும், ஈரானில் உள்ள சில முக்கிய எரிசக்தி அமைப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தாக்குதல்

குறிப்பாக இஸ்பஹான் நகரில் உள்ள எல்பிஜி நிர்வாகக் கட்டிடம் மற்றும் கோர்ரஷஹர் நகரில் உள்ள இயற்கை எரிவாயு குழாய் அமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக, ஈரானின் புரட்சிகரக் காவல்படைக்கு நெருக்கமான செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கோர்ரஷஹர் பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு நிலையத்திற்கு வெளியே ஏவுகணை தாக்கியதாகவும், அதில் கட்டமைப்பு சேதம் ஏற்பட்டிருந்தாலும், உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு நிலையம் சேதம்

இருப்பினும், இந்த தாக்குதல் அந்த பகுதியில் மீண்டும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த புதிய தாக்குதல் நடந்தது சர்வதேச கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

மேற்காசிய போர் பதற்றம்

முக்கியமாக உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஈரானின் பங்கு அதிகம் உள்ளதால், எரிசக்தி கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உலக சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதி நிலை திரும்புமா அல்லது மோதல் மேலும் தீவிரமடையுமா என்பது குறித்து உலக நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+