வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் எங்கே.. கண்டுபிடித்த அதிகாரிகள்.. முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்பது இந்தியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவில் ஒன்று. இங்கு ஏரளமான வனவிலங்குகள் உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் தான் இருக்கிறது. இந்த இடம் சுமார் 1490 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய வனப்பகுதியாகும். இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் சிங்கம் ஒன்று மாயமான நிலையில், சிங்கத்தின் இருப்பிடம் டிரோன் கேமரா மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தானாகவே கூண்டுக்கு வந்துவிடும் என பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தெற்காசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கு சுமார் 2,300 முதல் 2,400-க்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் இருக்கின்றன. சிங்கம், புலி, யானை, கரடி, காட்டுமாடு, குரங்கு, ஒட்டகம் உள்பட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இந்த பூங்கா 1490 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இந்த பூங்கா வளாகத்துக்குள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கையோடு சிங்க உலாவிடம், அதாவது 'லயன் சபாரி' பகுதி தனியாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காவில் உள்ள 9 சிங்கங்களில் சிங்க உலாவிட பகுதியில் மட்டும் 3 ஆண் சிங்கங்கள், 4 பெண் சிங்கங்கள் இருக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை 2 சிங்கங்களை பொதுமக்கள் பார்வைக்காக லயன் சபாரி பகுதியில் கூண்டில் இருந்து ஊழியர்கள் திறந்து விட்டார்கள். வழக்கமாக காலையில் திறந்து விடப்படும் சிங்கங்கள், மாலை நேரத்தில் உணவு உண்பதற்காக கூண்டுக்கு வந்துவிடும். ஆனால் வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்ட 2 சிங்கங்களில் 'ஷெரியார்' என்ற 5 வயது ஆண் சிங்கம் கூண்டுக்கு வரவில்லை, அது காணாமல் போனதாக தகவல்கள் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக பூங்காவின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் வாகனத்தில் சென்று லயன் சபாரி பகுதி முழுவதும் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி வேலிகள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்தனர். சனிக்கிழமை மாலை வரை சிங்கம், ஊழியர்கள் கண்ணில் படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து டிரோன் கேமரா மூலம் மாயமான சிங்கத்தை தேடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இது மட்டும் இல்லாமல் வன ரேஞ்சர்கள் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு ஊழியர்களும் சிங்கத்தை வாகனத்தில் சென்று தீவிரமாக தேடி வந்தனர்.
டிரோன் கேமரா மூலம் சிங்கம் எந்த பகுதியில் உலா வருகிறது என்பதையும் அதிகாரிகள் பார்த்தனர். சிங்கம் நல்ல உடல் நலத்துடன் சுற்றி வருவதை டிரோன் கேமரா மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று மாலை தலைமை வனத்துறை உயர் அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நேரில் சென்று சிங்க உலாவிடபகுதியை பார்வையிட்ட உறுதி செய்தனர்.
இது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "மாயமான சிங்கம் உலா வருவதற்கான அடையாளங்கள் அதனுடைய கால் பாதம் நடமாட்டங்கள் அறியப்பட்டுள்ளது. 'லயன் சபாரி' பகுதியில் சிங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கத்தின் நடமாட்டத்தை பகலில் சாதாரண டிரோன் கேமராக்கள் மூலமும், இரவில் வெப்ப இமேஜிங் டிரோன் கேமரா மூலமும் தொடர்ந்து 5 பேர் கொண்ட குழுக்கள் கண்காணித்து வருகின்றனர்.
சிங்கத்தை கண்காணிப்பதற்காக 10 இடங்களில் பிரத்தியேக கேமராக்கள் அமைக்கப்பட்டு அதனுடைய நடமாட்டங்களையும் உடல் நலத்தையும் கவனித்து வருகிறோம. லயன் சபாரி மிகவும் பாதுகாப்பானது. 2 அடுக்கு பாதுகாப்பு வேலிகள், சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக லயன் சபாரி பகுதியில் திறந்து விடப்படும் சில சிங்கங்கள், உணவு உண்பதற்கு வராமல் சிங்க உலாவிடத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விடும்.
பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் வழக்கமாக உணவு உண்பதற்கு தானாகவே வந்துவிடும். இந்த சிங்கம் 2023-ம் ஆண்டு பெங்களூரு பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications