தங்க நகை அடகு வைக்கும் போது.. எந்த காரணம் கொண்டும் செய்துவிடக்கூடாத தவறுகள்
சென்னை: தங்க நகையை அடகு வைத்து கடன் பெற போகிறவர்கள் நடைமுறையில் சில தவறுகளை செய்துவிட்டு புலம்புகிறார்கள். பாவம் பலருக்கும் சில கணக்குகள் புரியவில்லை.. இதனை சாதகமாக்கி கொண்டு சில தனியார் வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. ரிசர்வ் வங்கி கூட அந்த தவறை சரி செய்ய எவ்வளவோ முயன்றது. ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை என்பது தான் எதார்த்தம்.. என்ன தவறுகள்.. எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.
தங்க நகை அடகு என்பது பலரும் இன்றைக்கு கடன் வாங்க பயன்படுத்தும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. உங்களிடம் பணம் இல்லையா, உடனே நகையை அடகு வைத்து கடன் பெற்றுவிட முடியும். எந்த பிணையும் தேவையில்லை.. மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்.. எவ்வளவு கடன் உங்களுக்கு இருக்கிறது என எதுவும் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் பார்க்க மாட்டார்கள். உங்களுக்கு சில நிமிடங்களில் பணம் தந்துவிடுவார்கள். உங்கள் தேவைகளை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்.

தங்க நகை அடகில் நூதனங்கள்
தங்க நகையை அடகு வைக்கும் விவகாரத்தில் சில நூதனங்கள் உள்ளன. நீங்கள் ஆண்டு இறுதியில் நேரடியாக சென்று வட்டியை மட்டும் கட்டி நகையை மறு அடகு வைத்துக் கொள்ள முடியும். இப்படி செய்வதால் வங்கிகளுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும். உதாரணமாக ஒரு நகையை நீங்கள் 10.75 சதவீத வட்டியில் 2 லட்சத்திற்கு அடகு வைத்துள்ளீர்கள் என்றால், அதற்கு ஓராண்டு முடிவில் வட்டி அசல் சேர்த்து ₹2,21,500 கட்ட வேண்டியதிருக்கும். இதில் வட்டி தொகையான 21500 ரூபாயை நீங்கள் கட்டிவிட்டு மறு அடகு வைத்துக்கொள்ள முடியும். இப்படியே 3 ஆண்டுகள் வட்டியை மட்டும் கட்டினால் உங்கள் நகைக்காக நீங்கள் கிட்டத்தட்ட 64000 ரூபாய் வரை வட்டியே கட்டியிருப்பீர்கள்..
கணக்கு எப்படி
அதேநேரம் மாதம் நீங்கள் மாதம் தோறும் ₹8,000 செலுத்தினால், உங்கள் கடன் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்களில் (28 மாதங்கள்) முழுமையாக அடைந்துவிடும். ₹2,24,000 ரூபாய் தான் மொத்தமாக கட்டியிருப்பீர்கள். இதில் வருடம் வருடம் மாற்றி வைக்க வேண்டியதிருக்கும் என்று சற்று மாறுபாடுகள் இருக்கும். எனினும் வெறும் 24000 தான் வட்டியே கட்டியிருப்பீர்கள். அத்துடன் அசலையும் கட்டி முடித்துவிடுவீர்கள்.. ஆனால் வட்டியை மட்டும் கட்டியே வந்தால், எந்த காலத்திலும் நகையை திருப்ப வாய்ப்பு இல்லாமல் போகும். அதற்கு நீங்கள் கிட்டத்தட்ட 64000 வட்டியே கட்டியிருப்பீர்கள். அல்லது உங்கள் நகையின் கடன் வட்டியுடன் அசலும் ஏறி பெரிய கடன் தொகையாக ஏறி நிற்கும். இதை விடவும் அதிகமான வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.
தனியார் நிதி நிறுவனங்கள்
ஒரு கட்டத்தில் கந்துவட்டிக்கு வாங்கி வந்து நகையை திருப்ப வேண்டிய நிலை வரும். அதையும் நம் மக்கள் பலர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் தனியார் நகை அடகுகடைகளில் போய் ரசீதை கொடுத்த நகையை மாற்றி வைக்க செல்வார்கள். அங்குள் நிலைமை அவர்களுக்கு உண்மையில் புரியாது. ஏனெனில் உச்சபட்சமாக வாங்கினால் 22 சதவீதம் வட்டி ஆகும்.
அதிகபட்ச பணம்
அதிகபட்ச தொகை கிடைக்கும் என்ற ஆசையில், அதிக பணத்திற்கு நகையை தனியார் நிதி நிறுவனங்களில் மாற்றி வைக்கும் போது, நகையை பறி கொடுக்க வேண்டிய நிலை வரும். தனியார் நிதி நிறுவனங்களில் 22 சதவீத வட்டி வரை வசூலிக்கப்படுகிறது. அதாவது திருப்ப முடியாத நகைகளுக்கு 2 லட்சம் நகை கடனுக்கு மாதம் 3,586 வட்டி கட்ட வேண்டியதிருக்கும். அதற்கு மூன்று ஆண்டு முடிவில் வட்டி மட்டுமே ரு ₹1,29,096 கட்டியிருப்பார்கள். இது உதாரணம் மட்டுமே சற்று வேறுபாடுகள் இருக்கும்.
தனியார் நிறுவனங்களில் அடகு
அதிகபட்ச மதிப்பில் நகையை தனியார் வங்கிகளில் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைக்க வேண்டிய நிலை வருகிறது என்றால், ஓரிரு மாதத்திற்குள் நகையை திருப்ப முடியும் என்றால் மட்டும் வைக்கவும். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கி நகையை இழந்துவிடுவீர்கள்.. அதேபோல் நகையை அடகு வைக்கும் போது வட்டி குறைவாக இருக்கும் வங்கிகளை தேர்வு செய்து அடகு வையுங்கள்.
நகையை எங்கு அடகு வைக்கலாம்
பொதுத்துறை வங்கிகள் 8.4 சதவீத வட்டியில் கடன் தருகிறார்கள். அங்கு பணம் குறைவாகவே கிடைக்கும். அதேநேரம் வட்டியும் குறைவு என்பதால் எளிதாக நகையை மீட்க முடியும். அதேபோல் நகையை அடகு வைக்கும் போதே, மாதம் மாதம் எவ்வளவு நகைக்கு கட்ட முடியும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். உங்களால் மாதம் 2000, 5000, 10000 என எந்த தொகை கட்ட முடியும் என்பதை உறுதி செய்துவிட்டு நகையை அடகு வையுங்கள். நகையை அடகு வைத்த மாதம் முதல் நகைக்கடன் அக்கவுண்டிற்கு பணத்தை செலுத்துங்கள். ஒவ்வொரு மாதம் பணம் கட்டும் போது, நகைக்கடனுக்கு அசல் மட்டும் வட்டி குறையும். கடனை எளிதாக அடைக்கவும் முடியும்.
ரிசர்வ் வங்கியால் முடியவில்லை
பெரிய அளவில் வட்டியை சேமிக்க முடியும். இதற்காகவே ரிசர்வ் வங்கி, ஓராண்டு முடிவில் வட்டி கட்டி திருப்பும் முறையை நிறுத்த விரும்பியது. மாதம் மாதம் நகைக்கு வட்டி அசலை கட்டி மக்கள் பணத்தை சேமிப்பார்கள் என்று நினைத்தது. ஆனால் நடைமுறையில் வேறு சிக்கல் வந்தது. மக்கள் நகைக்கு மக்களால் மொத்தமாக பணத்தை கட்ட முடியாது என்பதால், அதனை பறிகொடுக்கும் நிலை வந்தது. இதனால் நகைக்கு வட்டியை மட்டும் கட்டி மாற்றி வைக்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. எனவே நகையை அடகு வைக்கும் போதே எத்தனை மாதங்களில் திருப்ப முடியும். அதற்கு மாதம் எவ்வளவு கட்டலாம் என்பதை முடிவு செய்துவிட்டு, அடகு வையுங்கள்.
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications