நல்லவேளை, கருணாநிதி மகன் பாஜகவில் சேர வாய்ப்பில்லை.. "துரை" போக போறாராம்.. ஹேப்பியில் தாமரை!

முக அழகிரி மகனுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு முக்கியமான தகவல் தமிழக அரசியல் களத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது... அதன்படி முக அழகிரி குடும்பத்தை பாஜக தங்கள் வசம் இழுக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கி உள்ளதாம்.
ஆரம்பத்தில் இருந்தே எப்படி ரஜினியை தங்கள் கட்சிக்குள் இழுக்க பாஜக, விடாப்பிடியாக இருக்கிறதோ அதே அளவுக்கு முக அழகிரியையும் முயற்சித்தது.. முக அழகிரி மத்திய அமைச்சராக இருந்தவர்.. நல்ல குணம்.. யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்து பண்புடன் பேசுவார்.

திமுகவில் உள்ள பல அதிருப்தி தலைவர்களுக்கு இப்போதுவரை பாசத்துடன் திகழ்ந்து வருகிறார் அண்ணன் அழகிரி.. அஞ்சாநெஞ்சன் இருப்பதால்தான் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு இருக்கிறோம் என்று பல மூத்த தலைகள் சொல்வதையும் அவ்வப்போது கேட்க முடிகிறது.

 திமுக

திமுக

திமுகவை போலவே, பாஜகவிலும் அழகிரிக்கு நண்பர்கள் அதிகம்.. இவரை பலமுறை பாஜக தரப்பு உரிமையோடு தங்கள் கட்சிக்கு வர அழைத்தது.. இந்த சமயத்தில்தான், ரஜினி கட்சியில் அழகிரி சேரப்போகிறார் என்று ஒரு குரூப் கிளப்பி விட்டது.. பிறகு பாஜக அழகிரியை தன் பக்கம் இழுத்து கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்து விட்டது என்று இன்னொரு பகீர் கிளம்பியது.. அதன்படி வெடித்து வந்ததுதான் கேபி ராமலிங்கம் விவகாரம்.

 பிளான்கள்

பிளான்கள்

எனினும், பாஜகவில் சேர இதுவரை அழகிரி சம்மதிக்கவில்லை... ஸ்டாலினுக்கு எதிராக பிளான்களை அழகிரி வைத்திருப்பாரே தவிர, பாஜகவில் நிச்சயம் சேரவே மாட்டார் என்று ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக சொல்லி வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 குக செல்வம்

குக செல்வம்

இதனிடையே கடந்த மாதம், டெல்லியின் பாஜக தலைவர் ஒருவர் மதுரைக்கு வந்து அழகிரியை சந்தித்து பேசியதாக இன்னொரு தகவல் கசிந்தது.. அப்போது, "நீங்கள் பாஜகவுக்கு வர வேண்டாம்.. ஆனால், திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும், சொந்தமாக கூட கட்சியை தொடங்குங்கள், நாங்கள் வேண்டுமானால் திமுக தரப்பின் 5 எம்எல்ஏக்களை தருகிறோம். அதை குக செல்வம் பார்த்து கொள்வார்.. கட்சி செலவை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.. வருங்காலத்தில் அமைச்சர் பதவியும் தருகிறோம்" என்று எடுத்து சொல்லி இருக்கிறார்.. அப்போதும்கூட அழகிரி தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி மறுத்துவிட்டாராம்!

அழகிரி

அழகிரி

ஆக... கடைசிவரை ரஜினியை போலவே, அழகிரியும் பாஜகவுக்கு பிடிகொடுக்காமலேயே இருந்து வரும்நிலையில்தான், பாஜகவின் கவனம் துரை அழகிரி மீது திரும்பி உள்ளது.. அழகிரி மகனுக்கு பாஜகவில் முக்கிய பதவி வழங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையை பாஜக தரப்பு தொடங்கியுள்ளதாம்... அந்த பேச்சுவார்த்தையும் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாம்.. அநேகமாக இதில் தயாநிதி அழகிரிக்கு தென்மண்டல பொறுப்பு வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த பேச்சுவார்த்தையால் அழகிரியும் ரொம்ப ஹேப்பியாம்.

 அழகிரி ஹேப்பி

அழகிரி ஹேப்பி

இதற்கு காரணம், "யார் யாரையோ தூக்கி உயர்த்தினேன். ஆனா என் மகனை ஒரு உயர்ந்த இடத்தில் உட்கார வைக்க முடியாமல் போய்விட்டதே" என்று உதயநிதிக்கு பொறுப்பு தந்த சமயமே, அழகிரி புலம்பியதாக செய்திகள் கசிந்தன.. அந்த வகையில், பாஜக இப்போது துரையை தங்கள் பக்கம் இழுத்து பொறுப்பையும் தருவதால், அழகிரி குடும்பத்துக்கே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.. இன்னொரு பக்கம் கருணாநிதி மகன் பாஜகவில் சேரவில்லை என்ற நற்பெயரும் கிடைத்துவிட்டது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+