"தம்பிக்கு என்னாச்சு"! ஸ்டாலினை சந்திக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த மு.க.அழகிரி!
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினை, அவரது மூத்த சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் மு.க. தமிழரசுவும் இருந்தார்.
தினமும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்ட 70 வயதான முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென லேசான தலைச்சுற்றலை உணர்ந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் இது வழக்கமான உடல் பரிசோதனை என்று கூறப்பட்டாலும், பின்னர் தலைச்சுற்றல் காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை சபரீசன் ஆகியோர் மருத்துவமனையில் உடன் உள்ளனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நேரில் சென்று முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தனர்.
முதல்வரின் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. அவர் மருத்துவமனையில் இருந்தவாறே தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று இரண்டாவது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு அங்கிருந்தபடியே அலுவல் பணிகளை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை அவருடைய அண்ணன் மு.க.அழகிரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் இன்னொரு சகோதரர் மு.க.தமிழரசுவும் உடனிருந்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் கருத்து மோதல் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவரை மீண்டும் திமுகவில் சேர்க்க அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மத்தியஸ்தம் செய்த போதும் கருணாநிதியின் மனம் மாறவில்லை. அவர் காலமானதை தொடர்ந்து அழகிரி, மீண்டும் திமுகவில் இணைவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் திமுக தோற்று போகும் என மு.க. அழகிரி பல்வேறு பேட்டிகளில் கூறி வந்ததால் அவருடன், ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசாமலேயே இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் வென்று முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட விழாவுக்கு அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அவர் தனது மகன் துரை தயாநிதியையும் மகள் கயல்விழியையும் அனுப்பியிருந்தார். தயாநிதியை உதயநிதி ஆரத்தழுவி வரவேற்றார். ஸ்டாலின் முதல்வரானதும் எத்தனையோ முறை மதுரை சென்ற போதெல்லாம் அழகிரியை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
இந்த நிலையில் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சியில் சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின், நேரில் சென்று தனது அண்ணன் மகனை சந்தித்து நலம் பெற வாழ்த்தினார்.
மேலும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்றதும் ஜல்லிக்கட்டு தொடக்க விழாவுக்கு மதுரைச் சென்றதும் தனது பெரியப்பா அழகிரி, பெரியம்மா காந்திமதியை சந்தித்து ஆசி பெற்றார். அது முதலே இரு குடும்பத்தினரும் இணக்கமாக உள்ளனர்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications