துரை தயாநிதி எப்படி இருக்காருன்னு பாருங்க.. ஹேப்பி முகம்.. சலசலப்புகளை சல்லி சல்லியா நொறுக்கிய மனைவி
சென்னை : துரை தயாநிதியின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. நீண்ட நாட்களுக்கு பிறகு, இப்படியொரு போட்டோவை பார்த்த அழகிரி ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், திமுக தரப்பினரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்..
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையிலும், பிறகு சென்னை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சை: இதற்கு பிறகு, வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில், கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.. ஸ்ட்ரெச்சரில் சிகிச்சை பிரிவுக்குள் அழைத்து செல்லப்பட்டதுமே, அவருக்கு மருத்துவமனையின் A பிளாக்கில் துரை தயாநிதிக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் ஆரம்பமாகின. அந்த நொடியிலிருந்தே இந்த சிகிச்சை பிரிவுக்கட்டிடமானது போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.
அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த துரை தயாநிதி, பூரண குணமடைந்தார்.. மருத்துவமனையில் இருந்தும் கடந்த மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அழகிரியும், தாய் காந்தியும் தயாநிதியை வெளியே அழைத்து கொண்டு வந்தார்கள்.. 294 நாட்களுக்கு பிறகு துரை தயாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது, அழகிரியின் குடும்பத்தினரை பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது..
டிஸ்சார்ஜ்: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட துரை தயாநிதி, தன்னுடைய காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்... ஆனால், மருத்துவமனையிலிருந்து துரை தயாநிதி வெளியேறியபோது, அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், மீடியாக்களை படம் பிடிக்க விடாமல் தடுத்தனர்.. சிலரது செல்போனையும் பிடுங்க முற்பட்டதால், மருத்துவமனை வாயிலில் பரபரப்பு ஏற்பட்டது..
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய துரை தயாநிதி, மேல் சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் தற்போது உடல்நலம் தேறி வருவதால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்..
மனைவியுடன் செல்பி: இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தன்னுடைய அக்கா அஞ்சுக செல்வியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் துரை தயாநிதி.. அப்போது தனது மனைவியுடனும், அக்காவுடனும் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தன்னுடைய கணவர் துரை தயாநிதியின் இந்த போட்டோவை, அவரது மனைவி அனுஷா முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம், துரை தயாநிதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனபோது, அனுஷா மட்டும் மிஸ்ஸிங் என்று சோஷியல் மீடியாவில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.. "இத்தனை மாத கால சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில், அனுஷா மட்டும் ஏன் வரவில்லை? என்று கேட்கப்பட்டதற்கு, குடும்பத்தினரிடமிருந்து சரியாக பதில் கிடைக்கவில்லை" என்றெல்லாம் கிசுகிசுக்கள் சிலரால் கிளப்பி விடப்பட்டன.
முற்றுப்புள்ளி: ஆனால், அத்தனை சலசலப்புகளுக்கும், முணுமுணுப்புகளுக்கும், தற்போது தயாநிதியின் போட்டோவை வெளியிட்டு, பதிலடி தந்துள்ளார் மனைவி அனுஷா.. இந்த போட்டோவை பார்த்த பிறகு அழகிரி மற்றும் துரை தயாநிதியின் ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications