4 தொகுதி இடைத்தேர்தல்... ஸ்டாலினை வீழ்த்த கை கோர்க்கும் சீமான், அழகிரி, கமல்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    TN By Election: இடைத்தேர்தலில் ஸ்டாலினை வீழ்த்த கைகோர்க்கும் மூவர்- வீடியோ

    சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்களில் திமுகவை வீழ்த்துவதன் மூலம் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை பலவீனப்படுத்தும் முயற்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் மு.க. அழகிரி ஆகியோர் ஓரணியாக களம் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    லோக்சபா தேர்தல் தொடர்பான வியூகங்களில் மு.க.ஸ்டாலின் மெகா கூட்டணி அமைத்தது அவரது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியது. ஸ்டாலினின் இந்த முயற்சியை தோற்கடிக்கும் வகையில்தான் எதிர்க்கட்சிகள் வாக்குகளை சிதறடிக்கக் கூடிய சக்திகள் படுதீவிரமாக களமிறக்கப்பட்டன.

    குறிப்பாக கமல்ஹாசன், தினகரன் இருவரும் திமுகவுக்கான வாக்குகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே களத்தில் இருந்தனர்.

    இவர்களுடன் அரசியலைவிட்டு ஒதுங்கியிருப்பதாக சொல்லிக் கொள்ளும் மு.க. அழகிரியும் திரைமறைவில் கை கோர்த்தார்.

    அழகிரியின் வாய்ஸ்

    அழகிரியின் வாய்ஸ்

    வாக்குப் பதிவு நாளுக்கு முதல்நாள் தமது ஆதரவாளர்கள் அனைவருக்கும் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என உத்தரவு போட்டவர் அழகிரி. இதனால் அழகிரி ஆதரவாளர்கள் அப்படியே அதிமுக அணிக்கே வாக்களித்தனர்.

    இடைத் தேர்தல்

    இடைத் தேர்தல்

    தற்போது அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் சூடு பிடித்துள்ளன. இந்த 4 தொகுதிகளில் அரவக்குறிச்சியை தவிர 3 தொகுதிகளில் வெல்லுவது கடினம் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் திமுகவுக்கு வென்றுவிடுவதற்கு ஒரு துளியும் வாய்ப்பை தந்துவிடக் கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் கவனமாக இருக்கின்றன.

    அழகிரி சீமான் கமல்

    அழகிரி சீமான் கமல்

    குறிப்பாக சீமான், கமல்ஹாசன், மு.க. அழகிரி மூவரும் திமுகவுக்கு எதிராக ஸ்டாலினை பலவீனப்படுத்தி ஆக வேன்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இடைத்தேர்தல் களத்தில் திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஸ்டாலின் தகர்ப்பாரா

    ஸ்டாலின் தகர்ப்பாரா

    இப்படி செய்வதன் மூலம் திமுக தொண்டர்களுக்கு சோர்வு ஏற்படும்; கட்சியிலும் சலசலப்பு ஏற்படும் என்பதுதான் மூவரது எதிர்பார்ப்பு. இந்த மூவர் அணியின் வியூகத்தை மு.க.ஸ்டாலின் வெல்வாரா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+