அஜீத்குமாரை குடும்பத்துடன் சந்தித்து பேசிய துரை தயாநிதி! பரபரக்கும் ரசிகர்கள்! பின்னணி என்ன?
சென்னை: நடிகர் அஜீத்குமாரை குடும்பத்துடன் சந்தித்து பேசியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி.
இது தொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள துரை தயாநிதி, அல்டிமேட்டுனா சும்மாவா என அஜீத்தை புகழ்ந்துள்ளார்.
துரை தயாநிதி சினிமா தயாரிப்பாளராகவும் இருப்பதால் இந்தச் சந்திப்பை மையமாக வைத்து அஜீத் ரசிகர்கள் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.

திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி அஜீத்தின் தீவிர ரசிகர் ஆவார். கிளவுட் நைன் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அவர், கடந்த சில வருடங்களாக தயாரிப்பு பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் திடீரென நடிகர் அஜீத்குமாரை குடும்பத்துடன் அவர் சந்தித்து பேசியது பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளராக மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் நோக்கில் உள்ள துரை தயாநிதி அதற்காக அஜீத்தை சந்தித்து பேசியிருப்பாரோ என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே இந்தப் புகைப்படம் கடந்த வாரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் துரை தயாநிதி தனது மகனின் முதல் பிறந்தநாள் விழாவுக்கு அஜீத்குமாருக்கு அழைப்பு விடுக்கும் போது எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இது வீட்டில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் போல் இல்லாததால் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் எதேச்சையாக சந்தித்த போது எடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications