திமுகவில் திடீர் பரபரப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்திக்கிறார் அண்ணன் மு.க.அழகிரி?
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது சகோதரர் மு.க. அழகிரி இன்று நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மகன் மு.க.அழகிரியை 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கினார். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் மு.க. அழகிரி திமுகவில் இணைவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை.

2019 லோக்சபா தேர்தலின் போது மு.க. அழகிரி தனிக் கட்சி தொடங்குவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் மு.க.அழகிரி திமுகவுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியாக இருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற நிகழ்ச்சியில் மு.க.அழகிரியின் குடும்பத்தினர் பங்கேற்றனர். இதன்பின்னரும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும் மு.க. அழகிரியும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் நேரடியாக சந்திக்காமல் இருந்து வந்தனர்.
முதல்வராக பதவியேற்ற பின்னர் மதுரை நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் போது எல்லாம் மு.க.அழகிரியை சந்திக்கக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்திக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் மதுரையில் இருந்து மு.க. அழகிரி சென்னைக்கு விமானம் மூலம் வருகிறார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மு.க.அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க உள்ளார் என்கின்றன அவரது ஆதரவு வட்டாரங்கள். இந்த தகவல் திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications