போலீசுக்கே பாதுகாப்பு இல்லை.. ஸ்டாலின் குற்றச்சாட்டு! வில்சன் குடும்பத்திற்கு திமுக ரூ.5 லட்சம் உதவி
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த போது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வில்சன் கொலை சம்பவம் குறித்து திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என அதிமுக, பாஜக நிர்வாகிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"எனது கணவர் குடும்பத்தைவிட போலீஸ் துறையையே அதிகம் நேசித்தவர்" என்று உயிரிழந்த வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி அளித்துள்ள பேட்டி மிகுந்த மன வேதனையைத் தருகிறது. தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருப்பது மோசமான வாய்ப்பாகும்.
எனினும் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம் என்று கூறி, அதிமுக ஆட்சியினர் தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்களோ இல்லையோ, தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வில்சன் கொல்லப்பட்ட இந்த வழக்கில் விரைந்து விசாரணையை முடித்து- குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய தண்டனை கிடைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்று காவல்துறையில் பணிபுரிவோர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
சோதனைச் சாவடிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி - அங்கு பணியில் இருப்போருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உடனடியாக எடுத்திட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications