சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த காரணம் கொண்டும் அப்படி செய்ய மாட்டோம்.. ஸ்டாலின் தந்த உறுதி.. உற்சாகத்தில் திமுக பிரமுகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் வென்று திமுக ஆட்சிகு வந்த பிறகு , ஏற்கனவே தேர்தல் நடந்த உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படாது என்றும் தேர்தல் நடக்காமல் உள்ள பிற இடங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். சுமார் 500 அறிவிப்புகளை இருந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை மட்டும் வாசித்தார்.

அதன்பின்னர் செய்தியார்களுக்க பேட்டிஅளித்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த உடன் ஏற்கனவே தேர்தல் நடந்த உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படாது என்று உறுதி தெரிவித்தார்.

உதயநிதிக்கு வாய்ப்புதானே கொடுத்தோம்.. எம்எல்ஏ பதவியையா தூக்கி கொடுத்தோம்?.. மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு வாய்ப்புதானே கொடுத்தோம்.. எம்எல்ஏ பதவியையா தூக்கி கொடுத்தோம்?.. மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில், முழுமையாக நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், நான் ஏற்கனவே பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் தி.மு.க. பிரச்சாரத்திற்காக செல்லும்போது, பேசியிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அதனை அரைகுறையாக நடத்தி வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில், முழுமையாக நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், நான் ஏற்கனவே பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் தி.மு.க. பிரச்சாரத்திற்காக செல்லும்போது, பேசியிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அதனை அரைகுறையாக நடத்தி வைத்திருக்கிறார்கள்.

திமுக கலைக்காது

திமுக கலைக்காது

எந்த காரணம் கொண்டும் நடந்த தேர்தலை கலைக்க மாட்டோம். அ.தி.மு.க.வாக இருந்தால் அதை கலைப்பார்கள். நடைமுறையில் நாம் பார்த்திருக்கிறோம். தி.மு.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக அதை கலைக்கும் முயற்சியில் ஈடுபட மாட்டோம். மிச்சமிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை வேகமாக விரைவாக நடத்துவோம்" என்றார்.

திமுகவினர் உற்சாகம்

திமுகவினர் உற்சாகம்

ஸ்டாலினின் இந்த அறிவிப்பை கேட்டு திமுகவில் வெற்றி பெற்ற பல உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் சந்தோஷம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தல் , காஞ்சிபுரம், வேலூர், நெல்லை உள்பட அங்கிருந்து பிரிக்கப்பட்ட 10 மாவட்டங்களுக்கு மட்டும் நடக்கவிலலை. மீதமுள்ள மாவட்டங்களில் கிராமப்புற மற்றும் ஊராட்சி ஒன்றிய தேர்தல்கள் நடந்தது. இதில் திமுகவினரே அதிகம் வெற்றி பெற்றார்கள். அதிமுகவும் கணிசமாக வெற்றி பெற்றிருந்தது.

ஸ்டாலின் உறுதி

ஸ்டாலின் உறுதி

இந்நிலையில் ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்பு தேர்தலை களைத்துவிட்டு திமுக மொத்தமாக நடத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதைத்ததான் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ஏற்கனவே நடந்த தேர்தல்களை எந்த காரணம் கொண்டும் நடந்த தேர்தலை கலைக்க மாட்டோம். மிச்சமிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை வேகமாக விரைவாக நடத்துவோம்" என்றார்.

English summary
After winning the assembly elections and coming to power, the DMK leader Stalin assured that the local bodies that had already been elected would not be dissolved and that elections would be held in other places where elections had not taken place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X