ஜெயிலுக்கு போகப் போகிறார் விஜயபாஸ்கர்.. கூடிய விரைவில் தெரியும்.. ஸ்டாலின் டைரக்ட் அட்டாக்!
அமைச்சர் விஜயபாஸ்கரை நேரடியாக குற்றஞ்சாட்டினார் திமுக தலைவர் முக ஸ்டாலின்
சென்னை: அதிமுக தங்கள் சாதனைகளை விளக்கி ஒரு பக்கம் லிஸ்ட் போட்டு கொண்டிருந்தால், அந்த கட்சியின் ஊழல்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் லிஸ்ட் போட்டு தந்துள்ளார்... அதிலும் விஜயபாஸ்கரை ஸ்டிரைட்டாக குறி வைத்து பேசியுள்ளார் முக ஸ்டாலின்!
திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டையில் பேசிய பேச்சு தற்போது பெரும் சலசலப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

"தமிழகத்தை மீட்போம்" எனும் பெயரில் சட்டமன்றத் தேர்தல் குறித்து சிறப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது... இதில் வீடியோ கான்பரன்ஸில் ஸ்டாலின் பேசினார்.. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரை நேரடியாகவே டார்கெட் செய்து குற்றஞ்சாட்டினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்.கே நகர் தேர்தல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.. அவர் இருக்க வேண்டிய இடம் கோட்டையா? ஜெயிலா? இதை தெரிந்து கொள்ளும் காலம் ரொம்ப தூரத்தில் இல்லை.. ஊழல்வாதிகளிடம் இருந்து கோட்டையை மீட்கவே போரை தொடங்க இருக்கிறேன்.. திமுக-வின் சாதனை பட்டியலுக்கு இணையாக, அதிமுக ஆட்சியின் ஊழல் பட்டியல் மலையளவு குவிந்து கிடக்கிறது" என்றார்.
மேலும், தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ஒரு குழு போட்டுள்ளனர்... அதில் எம்பிக்கள் யாருமே இல்லை.. மாறாக தரக்குறைவான செயல்களில் ஈடுபட்ட டாக்டர் உட்பட அந்த குழுவில் இருக்கிறார்கள்.. அதை தட்டி கேட்க தைரியம், அதிமுக அரசுக்கு இல்லை.. இந்த கூட்டத்தை வீழ்த்தும் கடமை திமுக., தொண்டர்களுக்கு உண்டு. தேர்தல் என்ற உலைக்களத்தில் நாம் படைக்கலன்களாக மாற வேண்டும்" என்றார்.
திமுக தலைவர் இப்படி பேசியது, அக்கட்சிக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.. தலைவர் ரூட்டுக்கு வந்துட்டார்.. இனி ஒவ்வொரு அமைச்சரின் ஊழலையும் தெறிக்க விடுவார் என்று உடன்பிறப்புகள் தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் அதிமுக கடுமையான எரிச்சலில் உள்ளது.. கோட்டையில் திமுக என்னவென்று சபதம் எடுக்க போறாங்களாம்? இவங்க ஊழல் பண்ணலையா? குடும்ப ஆட்சி எல்லோருக்கும் போய் சேர்ந்தாச்சுதானே? காரில் திமுக கொடியை கட்டி செய்யாத அட்டூழியங்கள் ஏதாவது இருக்கிறதா? திமுகவின் குடும்ப சொத்து எவ்வளவு தெரியுமா? தன் முதுகை பார்த்து கொண்டு, அடுத்தவரை குறை சொல்ல வேண்டும் என்று பதிலுக்கு ரத்தத்தின் ரத்தங்கள் பாய்ந்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications