சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாழ்த்துச்சொல்ல சென்ற ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த ஆர்.எம்.வீரப்பன்..!

Google Oneindia Tamil News

சென்னை: எம்.ஜி.ஆர்.கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பனின் 94-வது பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து திரைப்படம் தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது சத்யா மூவிஸ் பேனரில் எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல் என பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் முதல் வரிசை அமைச்சர்களில் ஒருவராக இருந்தார். மேலும், 1991-ல் ஜெயலலிதா ஆட்சி அமைத்தபோதும், ஆர்.எம்.வீரப்பன் அமைச்சராகினார்.

mk stalin birthday wishes to mgr period senior politician rm veerappan

பின்னர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டு, அதிமுகவில் இருந்து வீரப்பன் வெளியேற்றப்பட்டதெல்லாம் தனிக்கதை. அதன் பிறகு எம்.ஜி.கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி இன்றுவரை அதை அவர் நடத்திக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 83% இடஒதுக்கீடு கோரி ஐக்கிய ஜனதா தளம் அதிரடி தீர்மானம்ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 83% இடஒதுக்கீடு கோரி ஐக்கிய ஜனதா தளம் அதிரடி தீர்மானம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லம் அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தான் ஆர்.எம்.வீரப்பனின் இல்லமும் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஆர்.எம்.வீரப்பன் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வீரப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.

mk stalin birthday wishes to mgr period senior politician rm veerappan

ஸ்டாலின் வருகையால் நெகிழ்ந்துபோன ஆர்.எம்.வீரப்பன், உட்காருங்க உங்ககிட்ட பேசனும் எனக் கூறி கருணாநிதியை பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் இந்தியின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், தமிழ் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறிய வீரப்பன், இதனைக் கண்டித்து திமுக சார்பில் நீங்க ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆர்.எம்.வீரப்பன் கோரிக்கையை புன்னகையோடு ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், அதற்கென்ன ஏற்பாடு செய்யலாம்ணே எனக் கூறி அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

English summary
mk stalin birthday wishes to mgr period senior politician rm veerappan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X