வைரமுத்துவுக்கு அகவை 66... அவரது கவித்தமிழுக்கு அகவை 16... மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் 66-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.
மேலும், நூற்றாண்டு காலம் வைரமுத்து நலமுடன் வாழ வேண்டும் என மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.

வைரமுத்துவுக்கு ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக மு.க.ஸ்டாலின் பகிர்ந்த வாழ்த்துச் செய்தியின் விவரம் பின்வருமாறு;
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இன்று அகவை 66.
அவரது கவித்தமிழுக்கு என்றும் வயது 16.
தமிழ் அன்னைக்குக் கிடைத்த அணிகலன்களில் வைரமும் முத்தும் சேர்த்தவர்,
முத்தமிழறிஞர் கலைஞரின் அன்புக்கு பாத்திரமானவர்!
ஆயிரமாண்டு வாழும் படைப்புகளைப்
படைத்து நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். இதனிடையே தனது பிறந்தநாள் குறித்து ட்வீட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள வைரமுத்து, '' எங்கே போய்விடும் காலம்? அடுத்த ஆண்டு உங்கள் உள்ளங்கை தொட்டு வாழ்த்துகள் வாங்குவேன் '' என தனது அபிமானிகளுக்கு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications