ஹலோ.. எப்படி இருக்கீங்க..? வீடியோ கால் மூலம் அழைத்து விசாரித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை வீடியோ கால் மூலம் அழைத்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்.
தனிப்பட்ட முறையில் நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றியும், மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
மேலும், தற்போது வீட்டில் ஓய்வில் இருந்தாலும் கூட தினமும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கொரோனா பாதிப்பு பற்றி தலைமைச் செயலாளரை அழைத்து விவரம் அறிந்துகொள்கிறார் ஸ்டாலின்.

எதிர்க்கட்சித் தலைவர்
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழலில், அது தொடர்பாக அரசு முன்னெடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் பற்றி அறிந்து கொள்வதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்வம் காட்டி வருகிறார். சுகாதாரத்துறை அதிகாரிகளை தாமே தொடர்புகொண்டு கொரோனோ தடுப்பு பணிகள் குறித்தும் நோயாளிகளின் உடல்நிலை முன்னேற்றம் பற்றியும் கேட்டறிந்து வருகிறார்.
|
நலம் விசாரிப்பு
இதனிடையே திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரை வீடியோ கால் மூலம் அழைக்கும் ஸ்டாலின், அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாகவும், திமுக மக்கள் பிரதிநிதிகள் செய்த உதவிகள் பற்றியும் கேட்டறிந்து வருகிறார். மேலும், உடல்நலத்தில் அக்கறையுடன் இருக்குமாறு அறிவுரை கூறும் ஸ்டாலின் பார்த்து கவனமாக இருக்குமாறும் அவர்களுக்கு அறிவுரை நல்குகிறார்.

ஆய்வுப்பணிகள்
சேகர்பாபு எம்.எல்.ஏவை தொடர்பு கொண்டு பேசும் ஸ்டாலின், சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு செய்வோம் என்று கூறினார்களே, களநிலவரம் எப்படியிருக்கு என கேட்கிறார். அதற்கு பதிலளித்த சேகர்பாபுவோ, அண்ணே இங்கு அந்த மாதிரி எந்த ஆய்வும் செய்ததாக தெரியவில்லை என்றும், மீடியாவுக்காக பேருக்கு 10 வீடுகளில் மட்டும் ஆய்வு நடைபெற்றதாக தெரிகிறது எனவும் கூறுகிறார். இப்படியாக செல்கிறது அந்த உரையாடல்.

இன்ப அதிர்ச்சி
இதேபோல் திண்டுக்கல், நாமக்கல், கோவை, கன்னியாகுமரி, சேலம் என பல பகுதிகளிலும் உள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள். மாவட்டச் செயலாளர்களை வீடியோ கால் மூலம் அழைக்கும் ஸ்டாலின், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் எந்தளவிற்கு அரசு மேற்கொள்கிறது என்ற விவரத்தை கேட்கிறார். மு.க.ஸ்டாலினிடம் இருந்து வீடியோ அழைப்பை எதிர்பார்க்காத பலரும் இன்ப அதிர்ச்சி அடைந்ததனர்.
-
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications