Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நானாவது 'முதல்வர்' கனவு காண்கிறேன்.. உங்களுக்கு அதற்கும் வாய்ப்பில்ல - 'விளாசும்' ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே பத்தாண்டுகாலம் அ.தி.மு.க ஆட்சியால் சீரழிக்கப்பட்டுள்ள தமிழகத்தை மீட்க முடியும் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செஞ்சி தொகுதி திமுக வேட்பாளர் மஸ்தானுக்கு ஆதரவாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பேசிய ஸ்டாலின், 'வீரத்திற்கும் தீரத்திற்கும் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கும் செஞ்சிக் கோட்டைக்கு வந்திருக்கிறேன். மயில் தோகை போல விரிந்திருக்கும் குன்றுகளைக் கொண்ட மைலத்திற்கு வந்திருக்கிறேன். அப்பர் பெருமானால் பாடப்பட்ட திண்டிவனத்திற்கு வந்திருக்கிறேன்.

 மோசமான ஆட்சி

மோசமான ஆட்சி

நாளுக்கு நாள் விலைவாசி விஷம் போல உயர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்தியில் இருக்கும் ஆட்சியும் - மாநிலத்தில் இருக்கும் ஆட்சியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறி மாறி வரியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அதைவிடக் கொடுமையானது, இப்போது ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 34,000-க்கும் மேற்பட்ட கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர்த்து தேவையில்லாத பொருட்களை மக்கள் தலைகளில் கட்டுமாறு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தியதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட மோசமான ஆட்சி ஒன்று இருக்கவே முடியாது.

 ஆற்றல் சக்தி

ஆற்றல் சக்தி

இந்த லட்சணத்தில் பழனிசாமி அடிக்கடி, மக்களைக் குழப்பி வெற்றி பெறுவதற்காக ஸ்டாலின் பொய் சொல்லி சதி செய்து கொண்டிருக்கிறார் என்று தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் பேசிக்கொண்டிருக்கிறார். மக்களை நான் குழப்பவில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எப்போது ஆறாம் தேதி வரப்போகிறது? எப்போது இந்த ஆட்சியை ஒழிக்கப் போகிறோம்? என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஸ்டாலின் கனவு காண்கிறார். அந்தக் கனவு பலிக்காது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நானாவது கனவு காண்கிறேன். உங்களுக்கு இனிமேல் அடுத்து முதலமைச்சர் பதவி வரும் என்பதைக் கனவு கூட காண முடியாது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் உண்மை. எனவே பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதில் மக்கள் இன்றைக்குத் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் பத்தாண்டுகாலம் சீரழிந்து போயிருக்கும் இந்த தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே அ.தி.மு.க. ஆட்சியை மட்டுமல்ல, பா.ஜ.க.வையும் உள்ளே விடக்கூடாது என்பதில் இன்றைக்கு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதைத் தடுக்கின்ற ஆற்றல் சக்தி தி.மு.க.விற்கு தான் உண்டு என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

 கையாலாகாதவர் – உதவாக்கரை

கையாலாகாதவர் – உதவாக்கரை

ஒரு ஏழைத்தாயின் மகன் தான் தமிழக விவசாயிகளை நிர்வாணமாக ஓட விட்டார். 1000 ரூபாய் - 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி மக்களை ஏ.டி.எம். வாசலில் நிற்க வைத்தார். ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து தொழில்துறையை நசுக்கி தொழிலாளர்களுடைய வேலையை இழக்க செய்தார். இவர்கள் இரண்டு பேரும் அதாவது மோடியும் - பழனிசாமியும் ஏழை இல்லாத நாடாக ஆக்கப் போகிறோம் என்று சொல்லி ஒரு மிகப்பெரிய பொய்யைச் சொல்லிக்கொண்டு இப்போது ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு என்று சொன்னாலே தொழில் நிறுவனங்கள் ஓடுகிறார்கள். அதற்கு காரணம், இங்கு தொழில் செய்ய வருபவர்களிடம் கமிஷன் கேட்பதுதான். அந்த கமிஷனை கொடுக்க முடியாது என்று சொல்லி பல மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள். எனவே முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி கையாலாகாதவர் - உதவாக்கரை.

 இதுதான் லட்சணம்

இதுதான் லட்சணம்

2011-ஆம் ஆண்டு, அதேபோல 2016-ஆம் ஆண்டும் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள். அதில் சிலவற்றை மாத்திரம் நான் சொல்ல விரும்புகிறேன். அனைவருக்கும் செல்போன் இலவசம் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? கேபிள் கட்டணத்தை 70 ரூபாய்க்கு குறைப்போம் என்று சொன்னார்கள். குறைத்தார்களா? பொது இடங்களில் வை-ஃபை வசதி செய்து தருவோம் என்று சொன்னார்கள். செய்தார்களா? அதை இப்போதும் சொல்லி இருக்கிறார்கள். 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னார்கள். கட்டினார்களா? திருச்சி, மதுரை, கோவையில் மோனோ ரயில் விடுவோம் என்று சொன்னார்கள். விட்டார்களா? விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் போடப்படாது என்று சொன்னார்கள். செய்தார்களா? ஆவின் பால் லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? இதுதான் அவர்கள் வாக்குறுதியை காப்பாற்றுகிற லட்சணம்.

 மஸ்தான் வேலை

மஸ்தான் வேலை

தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, சமஸ்கிருதத்தை திணித்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது. இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+