தங்கை கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் புடை சூழ.. திண்ணைப் பிரச்சாரத்தில் குதித்த மு.க.ஸ்டாலின்
ஓட்டப்பிடாரத்தில் முக ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை: ஓட்டப்பிடாரம் தொகுதி தெருக்களில் திமுகவின் பிரச்சாரம் களை கட்டி வருகிறது. முக ஸ்டாலின், அனிதா, கேஎன் நேரு என ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கி உள்ளனர்.
கூடிய சீக்கிரம் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க போகிறது. வெறும் 4 தொகுதி என்றாலும் திமுகவுக்கு இது எதிர்காலத்தை தீர்மானிக்ககூடிய தேர்தல்.
அதனால் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, கனிமொழி, வேலு, கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் பிரச்சாரம் செய்ய போகிறார்கள்.

2-ம் கட்ட பிரச்சாரம்
இந்த தொகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொள்ளும் 2-ம் கட்ட பிரச்சார விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மே 14-ம்தேதி ஓட்டப்பிடாரத்தில் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் இப்போதே திண்ணை பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின்.

திண்ணை பிரச்சாரம்
போன தேர்தலிலும் பாமக, மநீமய்ய பார்முலாவான கிராம சபையை கையில் எடுத்தார் ஸ்டாலின். இந்தமுறையும் பாமகவின் திண்ணை பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார். கடந்த முறை தருமபுரி தொகுதியில் பிரச்சாரம் செய்து முடித்துவிட்ட பிறகு, டாக்டர் ராமதாஸ் கார் எடுத்து கொண்டு, வெகுதூர கிராமங்களுக்கு சென்று அன்புமணிக்காக திண்ணை பிரச்சாரம் செய்தார். இது அந்த தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அனிதா ராதாகிருஷ்ணன்
இப்போது அதேபோல ஸ்டாலினும் இறங்கிவிட்டார். ஓட்டப்பிடாரம் தொகுதியில், தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்திற்குள் நுழைந்துள்ளார். கூடவே கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.என். நேரு என பெரிய பெரிய ஜாம்பவான்களும் வேட்பாளரை அழைத்து கொண்டு பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர்.

பாட்டிகள்
தெருக்களில் உள்ள வீட்டு திண்ணைகளில் எல்லோரும் கேஷூவலாக உட்கார்ந்து கொள்கிறார்கள். வழியில் வரும் பெண்கள், குழந்தைகளிடம் மகிழ்ந்து உரையாடுகிறார்கள். அதுவும் பாட்டிகள் ஸ்டாலினை பார்த்ததும் வாஞ்சையுடன் வந்து கைகுலுக்கி செல்கிறார்கள். பக்கத்தில் நேரு உட்கார்ந்து கொண்டு பாட்டிகளிடம் ஏதோ கேள்வி கேட்க, அதற்கு பாட்டிகள் பதில் சொல்ல.. ஸ்டாலின் உட்பட எல்லோருமே சிரிக்கிறார்கள்.
ஸ்டாலினுக்கு இந்த பக்கம் கனிமொழி, அந்த பக்கம் நேரு.. என ஓட்டப்பிடார தொகுதிகளில் திண்ணை பிரச்சாரம் களை கட்டி வருகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications