5,000 வந்ததா? திருப்பத்தூரில் ஏழை பெண் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்.. பூரித்த மகளிர்
திருப்பத்தூர்: மகளிருக்கு ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டு இருப்பது மகளிருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைக்கு மகளிர் பாராட்டுகள் தெரிவித்து வரும் நிலையில் திருப்பத்தூரில் ஏழை பெண் ஒருவர் வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அந்த பெண்னிடம் மகளிர் உரிமைத்தொகை சரியாக வருகிறதா? என்று விசாரித்தார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் விடுவித்தார். காலையிலேயே தமிழகத்தில் உள்ள 1.31 கோடி மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வங்கியில் வரவு வைக்கபட்டதாக செல்போன் ஒலித்தது.

ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்
இதனை பார்த்து இல்லத்தரசிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அடுத்த மூன்று மாதங்களுக்கான உரிமைத்தொகை முன்வரவாகவும், ரூ.2 ஆயிரம் கோடைக்கால போனஸ் ஆகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் வரும் தேர்தலிலும் வென்று திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் போது மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
ஸ்டாலினின் இந்த அறிவிப்பு மகளிரின் மனதை குளிரவைத்தது. தமிழகத்தில் உள்ள மகளிர் முதல்வர் ஸ்டலினுக்கு நன்றி தெரிவித்து வரும் நிலையில், நேற்று திருப்பத்தூர் செல்லும் வழியில் ஏழை பெண்ணின் வீட்டுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த பெண்ணிடம் 'ரூ.5 ஆயிரம் வந்துச்சாம்மா...' என்று கேட்டறிந்தார்.
நன்றி தெரிவித்த மக்கள்
திருப்பத்தூரில் நேற்று நடைபெற்ற வடக்கு மண்டல திமுக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்றார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரயிலில் சென்றார். ஜோலார் பேட்டை வரை ரயிலில் சென்ற ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் திருப்பத்தூருக்கு சென்றார். திருப்பத்தூர் செல்லும் வழியில் தாமலேரிமுத்தூர் என்ற இடத்தில் முதல்வர் ஸ்டாலினை மக்கள் வரவேற்க காத்திருந்தனர்.
அவர்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கிய ஸ்டாலின் அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். அரசின் நல திட்டங்கள் சரியாக வந்து சேருகிறதா? என்று கேட்டறிந்தார். அப்போது மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டதற்கும், மகளிர் உரிமைத்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்ததற்கும் மகளிர் நன்றி தெரிவித்தனர்.
படிப்பு செலவுக்கு இதுதான் பயன்படுகிறது
அப்போது அங்கு இருந்த மேகலா என்ற பெண்ணின் வீட்டிற்கு ஸ்டாலின் சென்றார். ஸ்டாலின் திடீர் விசிட்டால் அந்த பெண் உற்சாகம் அடைந்தார். அப்போது ஸ்டாலின் அந்த பெண்ணிடம் மகளிர் உரிமைத்தொகை ரூ 5 ஆயிரம் வந்துச்சா என்று கேட்டார். அதற்கு மேகலாவும் பணம் வந்துச்சு.. என்றார். இதுதான் முதல் முறையாக வருகிறதா இல்லை ஏற்கனவே உரிமைத்தொகை வருகிறதா என்று கேட்டார்.
அப்போது அந்த பெண், ஆரம்பத்தில் இருந்தே மாதம் மாதம் ஆயிரம் சரியாக வந்து கொண்டு இருக்கிறது. படிப்பு செலவுக்கு இதுதான் பயன்படுகிறது" என்று கூறினார்.
மேலும் இதற்கு முன்பு யார் ஆட்சியிலும் இப்படி நலத்திட்டங்கள் கிடைத்து இல்லை.. உங்கள் ஆட்சியில்தான் இவ்வளவு நலத்திட்டங்கள் கிடைக்கிறது என்று கூறினார்.
பள்ளி படிக்கும் மேகலாவின் மகளும் ஸ்டாலினிடம் உரையாடினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications