சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளை காப்பாற்ற போராடும் அதிமுக.. ஸ்டாலின் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற ஆளும் கட்சியே போராடுவது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை காமுகர்கள் கூட்டம் ஒன்று கொடூரமான பாலியல் வன்முறைக்குட்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியும் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

சில நிமிடங்களே நீடிக்கும் அந்த வீடியோவைப் பார்க்க முடியாத அளவுக்கு அபலை மாணவிகள் அலறித் துடிக்கும் காட்சிகள் உள்ளன. இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் துணையாக இருப்பதும் நக்கீரன்-ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது.

இவர்கள்தான் மெயின் பிளேயர்ஸ்.. 4 பேருக்கு இடையில்தான் போட்டி.. தமிழகத்தின் அரசியல் சதுரங்கம்! இவர்கள்தான் மெயின் பிளேயர்ஸ்.. 4 பேருக்கு இடையில்தான் போட்டி.. தமிழகத்தின் அரசியல் சதுரங்கம்!

பாலியல் வன்முறை

பாலியல் வன்முறை

பொள்ளாச்சிப் பகுதியில் பொதுமக்களும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த மிகப் பெரிய அளவிலான பாலியல் வன்முறையில் ஒரு துளி மட்டுமே வெளிவந்துள்ளது.

துணை போகிறது

துணை போகிறது

காவல்துறை தரப்பிலும் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. சிக்கியவர்களைத் தப்பவிடுவதற்காக ஆளுந்தரப்பு பகீரத முயற்சி எடுத்து வருகிறது. தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழிக்கும் மிக மோசமான ஒரு கலாச்சாரத்திற்கு ஆளுங்கட்சியான அ.தி.மு.க. துணை போவது கடும் கண்டனத்திற்குரியது.

தண்டனை

தண்டனை

தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

போராட்டம்

போராட்டம்

அ.தி.மு.க. ஆட்சியின் 8 ஆண்டு காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு சென்னை தொடங்கி பொள்ளாச்சி வரை ஏராளமான கொடூர நிகழ்வுகள் நடந்துள்ளன. பொள்ளாச்சியில் நடந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனை வலியுறுத்தி, தி.மு.கழகம் சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும் என தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

English summary
DMK President MK Stalin condemns ADMK for protecting Pollachi Sexual Harrassment accused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X