அருகில் அழைத்து பாராட்டியது இன்னும் நிழலாடுகிறது.. காத்தவராயன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
சென்னை: எளிமைக்கு இலக்கணமாம் குடியாத்தம் எம்எல்ஏ எஸ்.காத்தவராயனின் திடீர் மறைவு வேதனை தருகிறது என்று, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாார்.
நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது எனக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும், குடும்பத்தினர்,கழகத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்-ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அவர் கூறியுள்ளார்.

குடியாத்தம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற காத்தவராயன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மரணமடைந்தார்.
எளிமைக்கு இலக்கணமாம் குடியாத்தம் MLA திரு எஸ்.காத்தவராயனின் திடீர் மறைவு வேதனை தருகிறது.
— M.K.Stalin (@mkstalin) February 28, 2020
நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது எனக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்,கழகத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்-ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/EXRVJhjUH1
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மாவட்ட பிரதிநிதியாக பணியாற்றிய அவர், தற்போது மாவட்ட துணை செயலாளர். கடைக்கோடி தொண்டரிடமும், கனிவுடன் பழகும் மனிதநேயமிக்க பண்பாளர். தொகுதி பிரச்சினைகளை சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக தொகுத்து வாதாடி, அவையில் இருந்தவர்களை எல்லாம் வியக்க வைத்தவர். அவரது வாதத்திறமையை நேரில் கண்ட நான், அவரை என்னருகில் அழைத்து பாராட்டியது இன்றும் என் கண் முன் வந்து நிழலாடுகிறது.
என்னுடன் பணியாற்றி வரும் கழக சட்டமன்ற உறுப்பினர்களில், நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும், பறிகொடுத்திருப்பது எனக்கு பேரிழப்பு. இந்த துயரமிகுந்த தருணத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications