முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை!
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.2.96 கோடி உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்தும், 90 சவரன் நகையும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினிடம் சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் வேட்புமனுவில் தகவல்
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதன்படி, கொளத்தூர் சட்டசபை தொகுதியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தனர். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக ஸ்டாலின் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாதக சார்பில் சவுந்திர பாண்டியன், தவெக சார்பில் வி.எஸ்.பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளார். வருமான வரிக் கணக்கில் காட்டப்பட்டுள்ள கணக்கின்படி, கடந்த ஆண்டில் ஸ்டாலினின் மொத்த வருமானம் 31 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. துர்கா ஸ்டாலினின் கடந்த ஆண்டு வருமானம் 5.33 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டாலின் கையில் ரொக்கமாக ரூபாய் 10,000, துர்கா ஸ்டாலின் கையில் ரொக்கமாக 40,000 ரூபாய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் பெயரில் வண்டிகள், கார்கள் எதுவும் இல்லை. ஸ்டாலினிடம் தங்க, வெள்ளி நகைகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்கா ஸ்டாலினிடம் 720 கிராம் பழைய தங்க நகைகள் இருப்பதாகவும் அதன் மதிப்பு 84 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினுக்கு அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.2.96 கோடி உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்தும், 2.10 கோடி அசையா சொத்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications