திமுக கூட்டணியில் பாமக உள்ளே? விசிக வெளியே? உடனே மறுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: திமுக கூட்டணியில் பாமக இணையும் என தகவல்கள் பரவி வரும் நிலையில் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்.
2026 சட்டசபை தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாஜக - அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளன. முன்பு பாஜக கூட்டணியில் இருந்த பாமக, அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் தெரியவரவில்லை.

கூட்டணி கணக்குகள்
இதற்கிடையே பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், பாமக திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. திமுக கூட்டணி கடந்த 2019 லோக்சபா தேர்தல் தொடங்கி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வரும் நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் பாமக திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்த விவாதங்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பாமக கூட்டணி எனக் கூறுவது வதந்தி எனத் தெரிவித்துள்ளார்.
பாமக கூட்டணி? - ஸ்டாலின் மறுப்பு
ஆங்கில ஊடகத்துக்கு ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், "திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்றும் பாமக இணையும் என்றும் கூறுவது வதந்திகளே. திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கிறேன். இந்த அரசு, கூட்டணி கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை கருத்தில் கொண்டு, அவர்களது ஒத்துழைப்புடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதிமுக பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன். தற்போது அது உண்மையாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியை ஏற்கனவே 2 முறை தோற்கடித்துள்ளோம். 2026 தேர்தலிலும் நிச்சயம் தோற்கடிப்போம். பாஜக உடன் கூட்டணி அமைத்ததன் மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டது. இந்த கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக தோற்கடிப்பார்கள்.தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு பிரதமர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications