சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழச்சி தங்க பாண்டியனுக்கு அந்த பெருமை கிடைச்சிருக்கு... ஸ்டாலின் பெருமிதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilachi Thangapandian: தமிழச்சி தங்கப்பாண்டியன் பிரச்சாரம்- வீடியோ

    சென்னை: அறிஞர் அண்ணா, முரசொலி மாறன் போன்றோர் போட்டியிட்ட தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பெருமையான விஷயம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

    திமுக தலைவர் ஸ்டாலின் தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனுக்கு ஆதரவாக சென்னை கண்ணகி நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    mk stalin election campaign for Thamizhachi Thangapandian in Chennai South

    இந்த கூட்டத்தில் திமுகவின் சாதனைகளை ஸ்டாலின் பட்டியலிட்டு பேசுகையில், "இதே தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் நின்று வென்று அண்ணா எம்பியாக டெல்லியில் குரல் கொடுத்தார். கலைஞரின் மனசாட்சியான முரசொலி மாறன், இதே தென் சென்னையில் நின்று தான் எம்பியாக மாறினார். அப்படிப்பட்ட தொகுதியில் போட்டியிடும் பெருமை தமிழச்சி தங்க பாண்டியனுக்கு கிடைத்துள்ளது.

    திராவிட இயக்கங்களின் வரலாற்றில் முதல்முறை.. மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு காரணம் என்ன?திராவிட இயக்கங்களின் வரலாற்றில் முதல்முறை.. மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு காரணம் என்ன?

    தென்சென்னை திமுகவின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு நிற்கும் தமிழச்சி தங்க பாண்டியனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். சமச்சீர் கல்வியை கொண்டுவர உதவியாக இருந்தவர் தமிழச்சி தங்க பாண்டியனின் சகோதரர் தங்கம் தென்னரசு.

    தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூடிய கூட்டத்தை பார்த்து பெருமைப்படுகிறேன். இங்கு கூடியிருக்கும் மக்கள் வெள்ளத்தை பார்த்து சொல்கிறேன், அகங்காரத்தோடு சொல்றேன், 40க்கு 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். 18ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல். மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்" என்றார்.

    English summary
    mk stalin election campaign in kannaki nagar for Thamizhachi Thangapandian in Chennai South
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X