நீரின்றி மட்டுமல்ல தாயின்றியும் அமைவதில்லை இந்த உலகு.. ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்து
சென்னை: நீரின்றி மட்டுமல்ல தாயின்றியும் அமைவதில்லை இந்த உலகு என திமுக தலைவர் ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் தயாளு அம்மாளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறுகையில் மனித உயிரினத்தின் பிறப்பு வடிவமே தாய் தான். அன்பு, கருணை, நேசம் ஆகிய உயரிய குணங்களுக்கு உயிர் உதாரணம் காட்ட வேண்டுமானால் அதுவும் தாய் தான். தனது ரத்தத்தை பாலாக்கித் தந்து உலகுக்கு உயிர்களைக் கொடுப்பவளும் தாயே!
அதனால் தான் தன்னலம் கருதாத உள்ளத்தை தாயுள்ளம் எனப் போற்றுகிறோம். சுமந்து பெற்று, சோர்வின்றி வளர்த்து, துன்பங்களைத் தனதாக்கி இன்பங்களைப் பிள்ளைகளுக்கு வழங்கும் அன்னையர் அனைவரையும் நாம் எந்நாளும் வணங்க வேண்டும்.
தாய்த்திருநாளாம் இந்நாளில் எனை ஈன்ற தாயாம் தயாளு அம்மாளின் கருணை பொங்கிய காலடிகளைத் தொட்டு வணங்குகிறேன். பெற்ற தாய்மார்க்கும், பெறாத நிலையிலும் ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்க்கும் பேருள்ளம் பெற்ற தாய்மார்க்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications