பத்மஶ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுகவின் மூத்த முன்னோடியான பத்மஶ்ரீ விருது பெற்றுள்ள கோவை பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது:

பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கும் கழக முன்னோடி, 103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் அவர்களை இன்று கோவையில் நேரில் சந்தித்து வாழ்த்தினேன்!

உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக பாப்பம்மாள் பாட்டிக்கு கருணாநிதி உருவ சிலையுடனான நினைவுப் பரிசை ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக, கோயம்புத்தூர் - ஈச்சனாரியில் நடைபெற்ற - முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி மகன் ஸ்ரீகார்த்திக் பழனிசாமி - ஸ்நேஹா மஹாலட்சுமி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதேபோல் கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜெகதீசன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தி.மு.கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், பகுதிச் செயலாளர்கள் எஸ்.ஏ.காதர், கார்த்திகேயன், வட்டச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை!












Click it and Unblock the Notifications