சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலினின் தரமான சம்பவம்.. வானதியை மேடைக்கு அழைத்து.. அமைச்சர்களுடன் பேச வைத்து.. அதிமுக அப்செட்டாமே

வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்த முதல்வரின் வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

சென்னை: வானதி சீனிவாசனை மட்டும் முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு அழைத்ததால், அதிமுக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.. மேலும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பத்து பேருக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவை புறக்கணித்துள்ளனர்.

Recommended Video

    Chennai-ஐ போல கோவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்

    இன்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா கோவையில் நடந்தது. அரசு நலத்திட்டப்பணிகள் துவக்கம் மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

    பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் 7 மணிநேரம் இருந்த சடலம்.. உயிரோடு வந்த அதிசயம்.. உத்தப்பிரதேசத்தில் ஷாக்! பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் 7 மணிநேரம் இருந்த சடலம்.. உயிரோடு வந்த அதிசயம்.. உத்தப்பிரதேசத்தில் ஷாக்!

    இந்த விழாவில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு பின்வரிசையில் இடம் வழங்கப்பட்டிருந்தது.. ஆனால் எதிர்க்கட்சிகளான பாஜக, அதிமுக எம்எல்ஏக்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது...

    கோவை தொகுதி

    கோவை தொகுதி

    எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பத்து பேருக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவை புறக்கணித்தனர்... விழா மேடையில் அதிமுகவினருக்கு இடம் ஒதுக்கியும் வராததால், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு இடம் கொடுக்கப்பட்டது. அதன்படி, கீழே விருந்தினர்கள் வரிசையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் உட்கார்ந்திருந்தார்..

    செந்தில்பாலாஜி

    செந்தில்பாலாஜி

    விழா மேடையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிக் கொண்டிருந்தபோது, கீழே வரிசையில் அமர்ந்திருந்த வானதி சீனிவாசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் வந்து அமருமாறு அழைத்தார். வானதி சீனிவாசனும் அவரது அழைப்பை ஏற்று விழாமேடைக்கு வந்து, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்... அமைச்சர்களுடன் உட்கார்ந்து மேடையில் உரையாற்றினார்.. முதல்வரின் வானதியை மேடைக்கு அழைத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், முதல்வரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்..

    பாராட்டு

    பாராட்டு

    அதேபோல் மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும், வழிநெடுக பேனர்கள், புகைப்பட பேனர்களும் இல்லை... இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல, வஉசி மைதானத்தில் ஏற்படுத்தப்பட்ட விழா மேடையில் முதல்வர் முக ஸ்டாலினின் படம் கூட இல்லாமல் உள்ளது.. இதுவும் மக்களை ஈர்த்து வருகிறது.. ஆனால், கோவை அதிமுகவை தவிர மற்ற தரப்பினர் அனைவரும் இன்றைய நிகழ்வுகள் குறித்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    அடிக்கல்

    அடிக்கல்

    அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர், "சென்னை போல் கோவை மாநகர வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தர அரசு முடிவு செய்துள்ளது.. கோவை நகரின் மத்தியில் உள்ள சிறைச்சாலை நகருக்கு வெளியே மாற்றப்படும்.. அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான வெற்றி நிலையில், கோவையில் வெற்றி வாய்ப்பை பெறவில்லை. வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மாவட்டமாக இருந்தாலும், மாபெரும் மக்கள் சபை இங்குதான் நடத்தப்படுகின்றது. அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள்தான் என இந்த அரசு செயல்படுகின்றது.. திமுக அரசை பொறுத்த வரை மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

    English summary
    MK Stalin invite BJP MLA Vanathi Srinivasan to stage and ADMK upset
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X