சுதந்திர தினம் 2021: அன்று தந்தை வாங்கிக் கொடுத்த உரிமை.. இன்று கொடியேற்றிய மகன் ஸ்டாலின்
சென்னை: சுதந்திர தினத்தன்று மாநில தலைநகரங்களில் ஆளுநர்களே கொடியேற்றி வந்த நிலையில் முதல்வர்களும் கொடியேற்ற வேண்டும் என்ற உரிமையை கருணாநிதி வாங்கிக் கொடுத்த நிலையில் இன்றைய தினம் அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக மூவர்ணக் கொடியை கொடியேற்றினார்.
Recommended Video
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நடைபெறுகிறது. அதன்படி இன்றைய தினம் தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்.

மாநில தலைநகரங்கள்
இந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி சுதந்திர தின விழாக்களில் மாநில தலைநகரங்களில் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

குடியரசு தின விழா
இதையேற்ற மத்திய அரசு, குடியரசு தினங்களில் மாநில தலைநகரங்களில் ஆளுநர்களும் சுதந்திர தின விழாக்களில் மாநில தலைநகரங்களில் மாநில முதல்வர்களும் கொடியேற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் கடந்த 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல்வர் கருணாநிதி தேசியக் கொடியை ஏற்றினார்.

முதல்முறை
சுதந்திர தினத்தன்று முதல் முறையாக தேசியக் கொடியை கருணாநிதி ஏற்றினார். இதையடுத்து 50 ஆவது சுதந்திர தினத்தன்றும் கருணாநிதியே தேசியக் கொடியை ஏற்றினார். தற்போது 75 ஆவது சுதந்திர தின விழாவில் கருணாநிதியின் மகனும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் கொடியேற்றினார்.

கோடிக்கணக்கான தொண்டர்கள்
அதிலும் முதல்முறையாக அவர் தேசியக் கொடியை ஏற்றியதை அவரது கோடிக்கணக்கான தொண்டர்கள் கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர். நேற்று முன் தினமும், நேற்றும் சிறப்பான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்ததை அடுத்து பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்றைய தினம் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆன நிலையில் இன்றைய தினம் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!












Click it and Unblock the Notifications