ஞாயிறு காலை 10 மணிக்கு.. ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிடுகிறார் ஸ்டாலின்.. திமுக அறிவிப்பால் பரபரப்பு
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று திமுக கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை இன்று முறைப்படி துவங்கினார்.
பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே, அதிரடியாக, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்போர் ஒவ்வொருவருக்கும் தலா 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஸ்டாலின் குற்றச்சாட்டு
இது குறித்து கேள்வி எழுப்பிய திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் தனது சுயநலத்திற்காக, தேர்தல் ஆதாயத்துக்காக இப்போது இந்த நிதி உதவியை அறிவித்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. கொரோனா நோய் தொற்று காலம் மற்றும் புயல் பாதிப்பு காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க நான் கேட்டுக்கொண்டேன். அதை முதல்வர் வழங்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது சுயநலம் காரணமாக தான் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

முதல்வர் பதிலடி
இதற்கு பதிலடியாக, பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த பொங்கல் காலத்திலும், 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போது கொரோனா நோய் தொற்று மற்றும் புயல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிதி உதவியை உயர்த்தி வழங்குகிறோம். கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்வது தவறா என்று கேள்வி எழுப்பினார்.

முதல் நாளே சரவெடி
முதல்வர் பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே அதிரடி அறிவிப்பு.. அதற்கு பதில் கேள்வி.. அதற்கு பதிலடி என்று சூடு பறக்க ஆரம்பித்து உள்ளது அரசியல் களம். இந்த நிலையில் தான் திமுக பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

திமுக பேஸ்புக் பக்கம்
திமுக முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 20ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, தலைவர் ஸ்டாலின் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட உள்ளார். காத்திருங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் பேஸ்புக்கில் தங்கள் விருப்பத்தை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

என்ன அறிவிப்பு?
ஆன்லைன் மூலமாகத்தான் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று தெரிகிறது. ஆனால் எதைப் பற்றி என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பா? அல்லது ஆட்சியாளர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டா? கட்சி நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகிறதா? என்ற பல்வேறு கேள்விகளை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications