நம்பர் 1 ஸ்டாலின்.. நாட்டிலேயே சிறந்த முதல்வர்.. மீண்டும் போட்டு தாக்கிய தலைவர்.. டக்னு பார்த்த பாஜக
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஓட்டேரியில் நடந்த விழாவில், கி.வீரமணி பேசும்போது, "தமிழ் மொழியை உலக அரங்கில் உலக மொழிகளுக்கு இணையான செம்மொழி என்ற பெருமையை கிடைக்க செய்தவர் கலைஞர்.

நெருக்கடி காலத்தில் எங்கள் மீது விழுந்த அடிகள் ஏராளம். அந்த அடிகளை பெற்று, இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக நம் முதலமைச்சர் இருக்கிறார். இந்தியாவுக்கே சவால் விடும் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்.
இங்கு ஒருவர்தான் ஒரு பணியாளன் என்று சொன்னவர். இப்போது தான் ஒரு அவதாரம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார். அந்த அவதாரத்தை நாம் தான் காக்க வேண்டி உள்ளது. இப்படியான அவதாரங்களின் கோயிலை காக்க வேண்டியது துறை நம் அமைச்சரிடம் தான் உள்ளது.
வெப்பம் தணிகிறது: கலைஞர் எதிர்கட்சி தலைவராக இருந்தபோதும் தனது ஆளுமையை நிலைநாட்டியவர். பெண்களுக்கு சொத்தில் சமபங்கு பெற்று தந்தது கலைஞர். இப்போது சூரியனின் வெப்பம் அதிகமாக உள்ளது. 4ம் தேதிக்கு பிறகு தான் சூரியனின் வெப்பம் தணியும்" என்றார் வீரமணி.
கடந்த வாரமும், மூத்த தலைவர் கி.வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால் மு.க.ஸ்டாலின் ஆள வந்துவிடுவார் என்கிறார் பிரதமர்.. ஏன்? மு.க. ஸ்டாலின் ஆண்டால் என்ன தப்பு?" என்று திராவிடர் கழக தலைவர் கேள்வியிருப்பியிருந்தது பாஜகவின் கவனத்தை திருப்பியிருந்தது.
இந்நிலையில், இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சர் என்று ஸ்டாலினை மீண்டும் மனதார வாழ்த்தி பேசியிருக்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.
அதேபோல, லோக்சபா தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு உச்சக்கட்ட சந்தோஷத்தை கடந்த 2 நாட்களாக தந்து கொண்டிருக்கிறது.. மீண்டும் பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என்று பெரும்பாலான கணிப்புகள் கூறியிருக்கின்றன.. ஆனால், இந்தியா கூட்டணி கட்சியோ, இந்த கணிப்புகள் அத்தனையும் பொய்யாகும் என்று சொல்லி வருகிறார்கள்.
அதிலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ, "இந்தியா கூட்டணியில் முக ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரது கட்சிகள் சிறப்பான வெற்றியை பெறும்" என்று கூறி, பாஜகவுக்கு எரிச்சலை தந்துள்ளார்..
சிறந்த முதல்வர்: இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்று மூத்த தலைவர் கி.வீரமணி புகழாரம் சூட்டியிருப்பது, எதிர்க்கட்சிகளுக்கு அதற்கு மேல் கடுப்பை தந்து கொண்டிருக்கிறதாம்.
இதனிடையே, டெல்லியில் தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார்கள்.. அதுபோலவே, பாஜக தேசிய தலைவர் நட்டாவின் இல்லத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையை இன்று காலையிலிருந்து மேற்கொண்டு வருகிறார்கள்.. ஆனால், இது எதற்கான ஆலோசனை என்று தெரியவில்லை..
பரபரப்பு: மத்திய அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியான நிலையில் பாஜக மூத்த நிர்வாகிகள் இப்படி ஆலோசனை மேற்கொண்டு வருவது, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் கவனத்தையும் திருப்பி வருகிறது. வாக்கு எண்ணிக்கை நாளை காலையில் தொடங்க உள்ள நிலையில், இரு தேசிய கட்சிகளுமே இப்படி ஆலோசனையை தனித்தனியாக மேற்கொண்டிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!












Click it and Unblock the Notifications