இதுதான் கூட்டணி? ஒரே எம்ஜிஆர் பாடலை ஒரே நாளில் பாடி எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்- கமல்ஹாசன்
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் இருவரும் எம்ஜிஆரின் ஒரே பாடலை ஒரே நாளில் பாடி விமர்சித்த நிகழ்வு இன்று நடந்துள்ளது. ஏற்கனவே திமுக, மநீம கூட்டணி அமைக்கும் என்கிற பேச்சுகளும் வலம் வருகின்றன என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன்; எம்ஜிஆரின் நல்லாட்சியை தருவேன் என தென் தமிழக பிரசாரத்தில் கமல்ஹாசன் தொடர்ந்து பேசிவந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கமல் மீது எடப்பாடி தாக்கு
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார். பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசனின் திரைப்படங்களை பார்க்கும் குடும்பங்கள் உருப்படுமா? என ஆவேசப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எம்ஜிஆர் பாடல் பாடிய ஸ்டாலின்
இன்னொரு பக்கம், கடலூர் திமுகவினரிடையே பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், போராடும் விவசாயிகளை தரகர்கள் என விமர்சித்த முதல்வர் எடப்பாடியாரை விமர்சித்தார். மேலும் சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்! ஒரு மானமில்லை. அதில் ஈனமில்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார்!" - என்று ‘எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்தில் எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார். இந்தப் பாட்டு இன்றைக்கு இருக்கும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்குப் பொருந்தும் எனவும் ஸ்டாலின் சாடியிருந்தார்.

பிக்பாஸ் பார்க்கும் முதல்வர்- கமல்
மு.க.ஸ்டாலின் இந்த பாடலை மேற்கோள்காட்டிய பேசிய சிறிது நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் கமல்ஹாசன் வழக்கம் போல தமது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பதில் தந்தார். முதலில், முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என கமல் குறிப்பிட்டிருந்தார்.

கமலும் அதே பாடல்
அடுத்த ட்வீட்டில் ஸ்டாலின் மேற்கோள் காட்டிய அதே எம்ஜிஆர் பாடலை கமல்ஹாசனும் சுட்டிக்காட்டி பதிவிட்டிருந்தார். அதில், சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். `எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' எனவும் பதிவிட்டிருக்கிறார் கமல்ஹாசன். ஸ்டாலினும் கமல்ஹாசனும் ஒரே எம்ஜிஆர் பாடலை ஒரே நாளில் மேற்கோள்காட்டி முதல்வரை விமர்சித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்!












Click it and Unblock the Notifications