நாயகன் ‘மீண்டு’ம் வர்றார்.. திருச்சி கிழக்கில் ஸ்டாலின்! விஜய் தொகுதியிலேயே களமிறங்க அதிரடி முடிவு?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து பரபரப்புகள் அதிகரித்து வரும் நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த தகவல்கள் திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டிலும் வெற்றி பெற்றார். இந்நிலையில் முதல்வராகப் பதவியேற்றதும், விஜய் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 6 மாதங்களுக்கு அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அங்கு போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகச் சொல்கின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்திருக்கும் நிலையில், அரசியல் களம் எதிர்பாராத திருப்பத்தை கண்டுள்ளது. பல ஆண்டுகளாக தமிழக அரசியலை நிர்ணயித்துவந்த திமுக - அதிமுக கட்சிகளை பின்னுக்கு தள்ளி, புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
தற்போதைய நிலவரப்படி, தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தின் தனி பெரும் கட்சியாக முதலிடத்தில் உள்ளது. திமுக கூட்டணி 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வென்றுள்ளது.
அதிர்ச்சி தரும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்தது மிகப் பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வென்றுள்ளார். கடந்த வாரம் வரை ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாக தள்ளப்பட்டுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டிலும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் முதல்வராகப் பதவியேற்றதும், விஜய் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுவே தற்போதைய அரசியல் பரபரப்புக்கு காரணமாக மாறியுள்ளது. ஜனவரிக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் திமுக தரப்பில் மு.க. ஸ்டாலின் நேரடியாக களமிறங்கலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு, அனுதாப அலை உருவாகி இருக்கும் நிலையில், அதனை வெற்றிக்கான அலையாக மாற்றி வெற்றியை அறுவடை செய்து ஸ்டாலின் சட்டமன்றத்துக்கு அனுப்ப திமுக திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.
மறுபக்கம், தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் போன்ற அனுபவம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்தலாம் எனவும் ஆலோசனை நடைபெறுகிறது. இதனால் தேர்தல் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தவெக சார்பில் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கனிம வளக் கொள்ளை உள்ளிட்ட விவகாரங்களில் கடுமையான நிலைப்பாடு எடுத்திருந்த அவர், மக்கள் மத்தியில் தனிப்பட்ட அறிமுகம் பெற்றவர் என்பதால், அவரை களமிறக்கலாம் என கட்சி வட்டாரங்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், தொகுதியில் கிறிஸ்த்துவ சமூகத்தினர் அதிகம் இருப்பதால் அதனைக் கருத்தில் கொண்டு வேட்பாளர் தேர்வு செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தேர்தல் வியூகங்கள் பல கட்டங்களாக தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த இடைத்தேர்தல் நடைபெறுமானால், அது வெறும் தொகுதி போட்டியாக இல்லாமல் தமிழக அரசியலின் அடுத்த கட்ட நிலையைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலாக மாறும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், திருச்சி கிழக்கு தொகுதி தற்போது தமிழக அரசியலின் "ஹாட் ஸ்பாட்" ஆக மாறியுள்ளது. விஜய், மு.க. ஸ்டாலின் மற்றும் பிற கட்சிகளின் முடிவுகள் அடுத்த கட்ட பரபரப்பை நிர்ணயிக்கப்படுகின்றன.
-
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு












Click it and Unblock the Notifications