சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. இந்த 2 பேருக்கும் லோக்சபா தேர்தலில் சீட் கிடையாது.. திமுகவின் அஸ்திரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் 2 முக்கியமான எம்பிகளுக்கு மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்காது என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுகளை வேகமாக எடுத்து வருகின்றன. லோக்சபா தேர்தலையொட்டி திமுக- மார்க்சிஸ்ட் இடையே நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

MK Stalin plans not to give seats to these 2 MPs for DMK Lok Sabha 2024 elections

ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக அதிரடி: இதன் மூலம் திமுக முதல் ஆளாக தொகுதி பங்கீடு விவரங்களை வெளியிட தொடங்கி உள்ளது. பொதுவாக தமிழ்நாட்டில் தேர்தல் காலங்களில் ஜெயலலிதா செய்யும் முக்கியமான செயல் ஒன்று அக்கட்சியில் மிஸ்ஸாகி வருகிறது.

நீங்க எல்லாம் பொறுமையா பேச்சுவார்த்தை நடத்துங்க.. நாங்க துரிதமா முடிவு எடுத்துட்டோம் என்று சொல்லும் அளவிற்கு திமுக தமிழக தேர்தல் களத்தில் வேகம் காட்ட தொடங்கி உள்ளது. அதிமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை கூட முடிக்கவில்லை.

வாய்ப்பு இல்லை: கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு மீண்டும் திமுக வாய்ப்பு வழங்காது என்கிறார்கள். முந்திரி ஆலையில் ஊழியர் மரணம் காரணமாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவர் பாமக கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அங்கு உள்ள கடலூர் திமுக எம்பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான டிஆர்வி முந்திரி ஆலையில் இவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் வேலைக்கு சென்ற இவர் இரவு முழுக்க வீடும் திரும்பவில்லை. அங்கு கடந்த 6 வருடமாக வேலை செய்து வந்த கோவிந்தராஜ் 8 மணிக்கு முன்பாக வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் அன்று இரவு நெடு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

கோவிந்தராஜ் மகன் செந்தில் வேலுக்கு, கோவிந்தராஜ் மரணம் குறித்த செய்தி சென்றுள்ளது. திமுக எம்பி டிஆர்வி ரமேஷின் உதவியாளர் தன்னிடம் இந்த மரண செய்தி குறித்து தெரிவித்ததாக செந்தில் வேல் குறிப்பிட்டுள்ளார். அதில், உங்கள் அப்பா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை பண்ருட்டி மருத்துவமனையில் வைத்து இருக்கிறோம் என்று தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது அப்பா கோவிந்தராஜனின் மரணம் குறித்து செந்தில்வேல் சந்தேகம் எழுப்பி உள்ளார். தனது அப்பாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும். அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவர் தற்கொலை செய்ய முகாந்திரம் இல்லை. அவர் திடமான மனிதர். அவரை அடித்து கொலை செய்துள்ளனர் என்று செந்தில் வேல் குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதோடு இந்த முந்திரி ஆலைக்கு சொந்தமான திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் மற்றும் ஆலை ஊழியர்கள் மீது அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இரண்டு பேருக்கு வாய்ப்பு இல்லை; இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் அவருக்கு மீண்டும் எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள். இது போக பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள். இவரை பற்றிய நல்ல ரிப்போர்ட் திமுக தரப்பிற்கு செல்லவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+