"ரூ.1000 வந்தாச்சு.. பிரதமர் சொன்ன 15 லட்சம் எங்கே.." முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தாக்கு
சென்னை: திமுக முப்பெரும் விழா இன்று வேலூரில் நடைபெறும் நிலையில், இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் திமுகவின் கடந்த கால சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
தந்தை பெரியார் பிறந்த நாள், திமுகவைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15) , திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு முப்பெரும் விழா வேலூரை அடுத்த கந்தனேரியில் நடைபெற்றது இதில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் ரயில் மூலம் சென்னையில் இருந்து காட்பாடி வந்தார். அங்கே அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
முப்பெரும் விழா: இன்று நடைபெற்ற தி.மு.க. பவள விழா - முப்பெரும் விழாவில் கி. சத்தியசீலனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து சுந்தரத்திற்கு அண்ணா விருதும், ஐ. பெரியசாமிக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சுதந்திர வேட்கையை விதைத்தது வேலூர் தான். "வேலூரில் சிப்பாய் கலக தூணை நிறுவியவர் கருணாநிதி..
அப்படிப்பட்ட வீரமான வேலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடப்பது மிகவும் பொருத்தமானது. குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தவர்.. இப்படி வேலூருக்கு பல்வேறு நலத் திட்டங்களைக் கருணாநிதி கொண்டு வந்தார்
துரைமுருகன்: நான் சிறுவனாக இருந்த போதே என்னைப் பார்த்தவர் துரைமுருகன்.. கருணாநிதி, க. அன்பழகன் மறைவுக்குப் பிறகு இருவருமாக இருந்து ஆறுதல் அளித்தவர் துரைமுருகன்.. மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கடந்த காலங்களில் நடந்தவற்றைக் கூறி வழிநடத்துவார்
நான் சாமானியன்.. மிக மிக சாமானியன் என்று கூறியவர் அண்ணா.. தம்பி என அழைத்தார் அண்ணா, உடன் பிறப்பே என்றார் கருணாநிதி.. நான் உங்களில் ஒருவன்.. தொண்டர்களில் சேர்ந்து தான் என்னைத் தலைவர்களாக ஆக்கினார்கள். தோன்றிய காலம் முதல் இளைமையோடு இருப்பது திமுக.. 2 கோடி தொண்டர்கள் இல்லை.. இரண்டு கோடி கொள்கைவாதிகள் நிரம்பிய கோட்டை திமுக
தொண்டர்கள்: எந்தவொரு பெரிய கட்டிடமாக இருந்தாலும் முதலில் எடுத்து வைப்பது செங்கல் தான். திறப்பு விழாவின் போது செங்கல் மறைக்கப்பட்டு மலர்கள் கட்டிடத்தை அழகரிக்கும். ஆனால், அந்த மலர்கள் சில நாட்களில் விழுந்துவிடும். செங்கல் தான் எப்போதும் நிலைத்து இருக்கும். அப்படி செங்கல்லைப் போலத் தொண்டர்கள் இணைந்திருக்கும் இயக்கம் திமுக. இங்கே இருப்பவர்கள் அனைவரும் கொள்கைவாதிகள்.

மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த முப்பெரும் விழா நடைபெறுகிறது.. தமிழ்நாட்டை நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக மாற்றி வருகிறோம்.. தமிழ்நாட்டைக் கண்டு பலருக்கும் பொறுமையாக இருக்கிறது.. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக அழிக்கப் பார்க்கிறது.. மாநில வளர்ச்சிக்கு முக்கியமானது வரி வருவாய்.. அதை ஜிஎஸ்டி மூலம் தடுத்து நிறுத்தினர்.. புதிய கல்விக் கொள்கை என்பதன் மூலம் கல்வி முறையைச் சீரழிக்கிறார்கள்.
15 லட்சம் எங்கே: நீட் தேர்வு குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. அனிதா முதல் ஜெகசீதன் வரை தற்கொலை தொடர்கிறது. கோச்சிங் சென்டர்கள் லாபத்திற்காகவே நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளனர்... வட மாநிலங்களிலும் நீட் தேர்வால் மரணங்கள் நடக்கிறது. அது குறித்து ஆராய்ந்துள்ளனரா? 2015இல் மதுரையில் எஸ்ம்ஸ் அமைக்கப்படும் என்றார்கள். இதுவரை எங்கே வந்தது அந்த எய்ம்ஸ். மத்தியில் இந்தியா கூட்டணி வென்றால் 15 மாதங்களில் எய்ம்ஸ் அமைக்க முடியாதா
முதல்வர் சொன்ன ரூ.1000 வந்தாச்சு.. பிரதமர் சொன்ன 15 லட்சம் எங்கே என கேட்கிறார்கள் பொதுமக்கள்.. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போவதால் இப்போது மற்ற விஷயங்கள் குறித்துப் பேசுகிறார்கள். லோக்சபா தேர்தலில் நிச்சயம் இந்தியா கூட்டணி வெல்லும்" என்றார்.
-
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
கோவை தெற்கில் பந்தயம் அடிக்கணும்.. செந்தில் பாலாஜிக்கு வேலுமணி செக் -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம் -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா?












Click it and Unblock the Notifications