மாணவர் பாரதிதாசன் கண்கலங்கி வெளியிட்ட வீடியோ.. தவெக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய முக ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்று மாணவர் பாரதிதாசன் பேசி இருப்பது என் நெஞ்சை கனக்க செய்கிறது. எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தவெக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்க முடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்" என்று கூறியுள்ளார்.

MK Stalin

மாணவர் பாரதிதாசன் கண்ணீர் வீடியோ

மலேசியாவில் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் பாரதிதாசன் என்ற தமிழக ஆராய்ச்சி மாணவர், "ஏப்ரல் மாதத்தில் இருந்து உதவித் தொகைக் கேட்டு வருகிறேன். ஆனால், இப்போது வரை கிடைக்கவில்லை. என்னை பல்கலைக் கழகத்தில் இருந்தே வெளியேற்றும் நிலை உருவாகியிருக்கிறது..

தவெக அரசு அதிகாரிகள் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும், வரலாற்றில் ரோஹித் வெமுலாவிற்கு என்ன நடந்ததோ, அதேபோன்ற அடக்குமுறையை தன் மீதும் பிரயோகிப்பதாகவும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். மாணவர் பாரதிதாசனின் கண்ணீர் வீடியோவை பார்த்த முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், "மாணவர் பாரதிதாசனுக்காக கல்வி கட்டணத்தை திமுகவே செலுத்தி படிக்க வைக்கும்" என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நெஞ்சைக் கனக்கச் செய்கிறது

"எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்" என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.

திமுக படிக்க வைக்கும்

ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்க முடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும், தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்.. என்று கூறியுள்ளார்.

மாணவர் கூறியது என்ன?

மாணவர் பாரதிதாசன் வெளியிட்ட வீடியோவில், "பணம் கட்டாததால் என்னை கல்லூரியை விட்டு அக்டோபர் முதல் வாரத்தில் நீக்க முடிவு செய்திருக்கிறார்கள். அக்டோபர் முதல் வாரத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க அழைப்பு வந்துள்ளது. ஆனால், பணமில்லாமல் அங்கு கூட போக முடியாத சூழலில் நிற்கிறேன்.

கடந்த 6 மாதங்களாக எனது மருத்துவ ஆராய்ச்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆய்வகப் பொருட்கள் வாங்கக்கூட நிதியில்லை. ஆனால் அரசுத் தரப்போ, 'நீ இந்த பொருட்களை ஆராய்ச்சிக்காகத்தான் வாங்கினாயா?' என்று மீண்டும் முதலிலிருந்து சந்தேகக் கேள்விகளை எழுப்பி மெயில் அனுப்புகிறது. என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+